வாகனங்களில் இ20 பெட்ரோலால் பெரிதாக பாதிப்பேதும் ஏற்படாது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவில் எத்தனால் கலந்த (இ20) பெட்ரோல் பயன்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகனங்களின் செயல்திறன் பாதிக்கப்படுவதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வாகனங்களில் இ20 பெட்ரோல் பயன்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது, "வாகனங்களில் இ20 பெட்ரோல் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வுகளின்படி, இ20 பெட்ரோலுக்காக கார்கள், இருசக்கர வாகனங்களின் என்ஜின்களில் எந்தவித மாற்றமும் செய்யவேண்டிய அவசியமில்லை எனத் தெரிய வந்துள்ளது.
பழைமையான வாகனங்களில்கூட இ20 பெட்ரோலில் இயங்கும்போது, அவற்றின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க வேறுபாடோ வழக்கத்துக்கு மாறான தேய்மானங்களோ எதுவும் காட்டவில்லை என்று ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2005 முதல் 2016 வரையில் தயாரிக்கப்பட்ட பிஎஸ்-3 (BS-III) வாகனங்களில் மட்டும் சில ரப்பர் பாகங்களும் கேஸ்கட்டுகளை மாற்ற வேண்டியிருக்கலாம். இருப்பினும், இதனை வாகனங்களின் வழக்கமான சர்வீஸிலேயே எளிதாகச் செய்துவிட முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
Summary
E20 petrol may harm BS-III vehicle rubber parts, says Union Minister Nitin Gadkari
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம்

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!

நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!
எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால்
விடியோக்கள்

அனுபவம் இல்லையா? அக்கறையில்லையா?: முதல்வரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் | ADMK | TVK



