FOLLOW US

ON GOOGLE DISCOVER

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் மின்னணு இயந்திரங்களில் 2-வது நாளாக மறுஆய்வு

கொளத்தூர் தொகுதியில் இவிஎம் இயந்திரங்கள் சரிபார்ப்புப் பணிகள் குறித்து...

News image

மு.க. ஸ்டாலின் | வி.எஸ். பாபு - கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2026, 11:37 am IST

சென்னை கொளத்தூர் தொகுதியில் இரண்டாவது நாளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்புப் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சென்னை கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போட்டியிட்டார். இருப்பினும், 74,202 வாக்குகள் பெற்று 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க. ஸ்டாலின் தோல்வியுற்றார்.

இந்த நிலையில், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை மனு வைத்தார். இதன்படி, 001, 004, 017, 028, 032, 075, 078, 079, 084, 087, 112, 122, 157, 170 ஆகிய வாக்குச்சாவடி மையங்களின் மின்னணு இயந்திரங்கள் மறுஆய்வு செய்யப்படுகின்றன.

இதனையடுத்து, கொளத்தூர் தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறுஆய்வு செய்யும் பணி புதன்கிழமையில் (ஜூலை 29) தொடங்கியது. ஒரு நாளுக்கு 2 வாக்குச்சாவடிகள் வீதம் 7 நாட்களுக்கு இந்தப் பணி நடைபெறுகிறது.

இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தொடங்கிய சரிபார்ப்புப் பணி, மு.க. ஸ்டாலின் உள்பட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.

Summary

Verification of EVMs in M.K. Stalin's Kolathur constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.