கார்கில் போரில் இன்னுயிரை ஈந்த வீரர்களின் நினைவைப் போற்றுகிறோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கார்கில் வெற்றி நாளில், மிகக் கடுமையான சூழலிலும் ஒப்பற்ற துணிச்சலுடனும் மனஉறுதியுடனும் இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நம் இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறோம்!
தாய்நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் நினைவைப் போற்றுகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய எல்லைக்குள் ஆக்ரமிக்க முயன்ற பாகிஸ்தானை அடித்து விரட்டிய வெற்றி நிகழ்வு கார்கில் போர். 1999 மே மாதம் ஆரம்பித்து ஜூலை 1999 வரை நிகழ்ந்த இந்த போரில் நம் தேசத்தை காக்க சுமார் 527 ராணுவ வீரர்கள் இன்னுயிரை இழந்தனர்.
இந்த போரின் வெற்றியாக பாகிஸ்தானின் ஆக்ரமிப்பு அகற்றப்பட்டதுடன் கார்கில் பகுதி முழுதுமாக இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த வீரதீர நிகழ்வில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களின் தியாகத்தை போற்றும்விதமாக ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினம் ஜூலை 26ஆம் தேதி நினைவுகூரப்படுகிறது.
Summary
DMK President M. K. Stalin stated that we honor the memory of the soldiers who laid down their precious lives in the Kargil War.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி
கர்நாடகம் செல்லும் முதல்வர் விஜய்! சதிவலையில் சிக்கக் கூடாது - மு.க. ஸ்டாலின்
எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார் விஜய்? மு.க. ஸ்டாலின் கண்டனம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




