/

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார் விஜய்? மு.க. ஸ்டாலின் கண்டனம்

காவல் மரணங்கள் குறித்து தவெக அரசுக்கு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தொடர்பாக...

News image

முதல்வர் விஜய் | மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 11:50 am IST

காவல் மரணங்கள் குறித்து தவெக அரசுக்கு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தொடரும் காவல் மரணங்கள். முதல்வர் வாயைத் திறப்பது எப்போது?

எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “மன்னிப்பு கேட்டால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதல்வரானதும் அதைக்கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்?

பொறுப்புக்கூறல், மன்னிப்பு – முதல்வருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமிரங்காத படுபாதக தவெக அரசுக்கு வன்மையான கண்டனங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

DMK Cheif MK Stalin condemns CM Vijay regarding custodial deaths

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.