தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

பதவி விலகுகிறாரா மத்திய அமைச்சர் நிதின் கட்கரி?

புதிய தலைமுறையினரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க நேரம் வந்து விட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளதைப் பற்றி...

நிதின் கட்கரி - (கோப்புப்படம்)

Published On :25 ஆகஸ்ட் 2026, 4:00 pm IST

புதிய தலைமுறையிடம் பொறுப்புகளை ஒப்படைக்க நேரம் வந்து விட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இப்போதெல்லாம் என்னால் முன்புபோல வேலை செய்ய முடிவதில்லை. முடிந்தபோதெல்லாம் செய்தேன். இப்போது, ​பணியாற்றுவதில் ஈடுபாடு குறைந்துவிட்டது. முன்பு போல் இனி பணியாற்ற முடியாது. புதிய தலைமுறையினரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

வரும் புதிய தலைமுறையினருக்கு அனுபவமிக்கவர்கள் வழிகாட்ட வேண்டிய நேரம். நான் தொடர்ச்சியாக 30 ஆண்டுகளாக பொது வாழ்வில் பணியாற்றி வருகிறேன்.

நான் என் அரசியல் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். பல விருதுகளையும் பெற்றிருக்கிறேன். ஆனால், முன்புபோல் இப்போது முடியவில்லை” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் மிகப் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படலாம் என்று மத்திய அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைச்சரவை குறித்த தகவல்களுக்கு மத்தியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சுகள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

அமித் ஷா, அஸ்வினி வைஷ்ணவ், பிரல்ஹாத் ஜோஷி, மனோகர் லால், ஜோதிராதித்ய சிந்தியா, மன்சுக் மாண்டவியா ஆகிய 6 மூத்த அமைச்சர்கள் 2-க்கும் அதிகமான துறைகளைக் கவனித்து வருகின்றனர். இவர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் நோக்குடனும், அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் மணிப்பூர், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப், குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம், பாஜக தலைவர் நிதின் நபின் தலைமையில் தனது தேசிய அளவில் 65 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் 51 பேர் புதியவர்களாக இடம்பெற்றிருந்தனர். இதனால், நிதின் கட்கரி விரைவிலேயே பதவியிலிருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Union minister Nitin Gadkari’s remarks about giving the “new generation” a chance have triggered fresh speculation about his retirement, amid reports of a possible Union Cabinet expansion and changes in ministerial portfolios.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.