அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

இந்தியாவிலேயே இழிவான கட்சி தவெக: இபிஎஸ் கடும் தாக்கு

தவெகவை இழிவான கட்சி என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து...

Edappadi Palaniswami | Vijay

எடப்பாடி பழனிசாமி | விஜய் - கோப்புப் படம்

Published On :

அதிமுக எம்எல்ஏ-க்களை விலைபேசி குதிரைபேரத்தில் ஈடுபட்ட தவெக இழிவான கட்சி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறவில்லை. 108 இடங்களில் வெற்றிபெற்று, ஒரு இடத்தை ராஜிநாமா செய்தனர்.

தற்போது 107 இடங்களில் மட்டுமே இருப்பதால், அவர்களுக்கு எம்எல்ஏ-க்கள் தேவைப்படுகின்றனர். அதற்காகத் திட்டமிட்டு, அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு மிட்டாய் கொடுத்து, ராஜிநாமா செய்யவைத்து, தேர்தலை உருவாகும் அவல நிலையை உண்டாக்கியிருக்கிறார்கள். இது வெட்கக்கேடு அல்லவா?

ஒரு கட்சி (தவெக) தொடங்கி வெறும் 3 ஆண்டுகள்தான் ஆகியுள்ளன. வந்தவுடனேயே இப்படிப்பட்ட வேலையில் இறங்கியிருக்கும் இவர்கள்தான் தூய்மையான ஆட்சி நடத்துகிறார்களா? இவர்கள் வெளிப்படையான ஆட்சி செய்வார்களா?

தன்னுடைய உழைப்பால் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், அது ஒரு நல்ல நிர்வாகம். அடுத்தவரின் உழைப்பில், அடுத்தவரின் கட்சியில் வெற்றிபெற்ற ஒருவரை ராஜிநாமா செய்யவைத்து, அதில் தன்னுடைய அரசு நிலைக்க வேண்டும் என்று நினைப்பதே தவறு. அந்தத் தவறைத்தான் தவெக தலைவர் (விஜய்) செய்திருக்கிறார்.

இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும் இவ்வாறான ஓர் இழிவான செயலில் ஈடுபடவில்லை. இந்த இழிவான செயலில் ஈடுபட்ட கட்சி தவெக மட்டும்தான்.

ராஜிநாமா செய்வதாக எழுதிக் கொடுத்த அதிமுக எம்எல்ஏ-க்கள், அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே பொதுப்பணித் துறை அமைச்சர் அலுவலகத்துக்குச் சென்று சால்வை அணிவித்து, கட்சியில் (தவெக) சேருகின்றனர்.

அப்படியெனில், திட்டமிட்டு செயல்பட்டிருக்கின்றனர். ஏற்கெனவே திட்டமிட்டு, குதிரை பேரத்தின் வழியாக விலை பேசப்பட்டு, ராஜிநாமா செய்ததாக நாடகம் அரங்கேற்றியுள்ளனர். ராஜிநாமா கடிதம் பரிசீலனையில் இருக்கும்போதே, ஒரு கட்சியில் இருப்பவர் மற்றொரு கட்சியில் சேர்வது என்பது சட்டத்துக்குப் புறம்பானது.

இப்படிப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள், அதிமுகவை தீர்த்துப்போன கட்சி என்று பேசுகின்றனர். தவெகவை நெல்லிக்காய் மூட்டைப்போல அவிழ்த்து விட்டால், சிதறிப் போய்விடும்" என்று தெரிவித்தார்.

Summary

AIADMK Secretary Edappadi Palaniswami criticized TVK as a despicable party that bought AIADMK MLAs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.