
இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி 6 நாள்கள் பிரசாரம்!
இடைத்தேர்தலில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணம் குறித்து....

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலா 3 நாள்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.
இதன்படி, மதுராந்தகம் தொகுதியில் செப்.24, 25 மற்றும் அக்.3ஆம் தேதியும் தாராபுரம் தொகுதியில் செப்.27, 28 மற்றும் அக்.2ஆம் தேதியும் அவர் பிரசாரம் செய்வார் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் அக்.6-ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம்(தனி) தொகுதியில் கணிதா சம்பத்தும் தாராபுரம் (தனி) தொகுதியில் பானுமதியும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டுமே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள்.
எனவே, இந்த இரு தொகுதிகளிலும் வெற்றியை தக்கவைக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami is set to campaign for 3 days each in the two constituencies of Maduranthakam and Dharapuram.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







