
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

கணிதா சம்பத், பானுமதி - படம்: அதிமுக
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை, அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, மதுராந்தகம்(தனி) தொகுதியில் கணிதா சம்பத்தும் தாராபுரம் (தனி) தொகுதியில் பானுமதியும் போட்டியிடுவார்கள் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் குறித்து ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், (35) மதுராந்தகம் (தனி), திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், (101) தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் கணிதா சம்பத்தும் தாராபுரம் (தனி) தொகுதியில் கே. பானுமதியும் போட்டியிடவுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்களாக தவெக துணைப் பொதுச் செயலாளர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் இ. பரந்தாமன், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் சுகன்யா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Summary
AIADMK General Secretary Edappadi K. Palaniswami has announced the party's candidates for the by-elections to the Maduranthakam and Dharapuram Assembly constituencies.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





