தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்காவல்துறையினரே ’டம்மி சிஎம்’ ஆக நினைக்கிறார்களா? உதயநிதி கேள்விதங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (செப். 10)கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி! ஐசியுவில் சிகிச்சை!பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பற்றி...

Secular Social Justice Winning Alliance

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி - கோப்புப்படம்

Published On :

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம்(தனி) ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் வருகின்ற அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நேற்று (செப். 9) முதல் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தவெக துணைப் பொதுச் செயலாளர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுவார்கள் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

மரகதம் குமரவேல், சத்தியபாமா

மரகதம் குமரவேல், சத்தியபாமா

இவர்கள் இருவரும் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். பின்னர், தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்கள்.

சென்னை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், தவெக தலைமையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக இணைந்து மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கினார்கள்.

Summary

Maduranthakam and Dharapuram By-elections: TVK Alliance Candidates Announced!

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER