கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

அமித் ஷாவும் காவல்துறையும் பெண்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்: ராகுல் காந்தி

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், காவல்துறையினரும் பெண்களைக் கண்டு அஞ்சுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமித் ஷா | ராகுல் காந்தி

Published On :

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், காவல்துறையினரும் பெண்களைக் கண்டு அஞ்சுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினர் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “தில்லியில் தற்போது நடக்கும் அனைத்துன் ஒரே பாணியைப் பின்பற்றி நடத்தப்படுகிறது. அச்சமின்றி கேள்வி கேட்கும் பெண்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன.

ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் ஆண் காவல்துறையினர் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். பெண் பத்திரிகையாளர்களின் கேமராக்கள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு, ஷாஹீன் மற்றும் நஃபிசா ஆகியோர் சாக்கேத் காவல் நிலையத்திற்குள் தங்களுக்கு இழைக்கப்பட்ட வன்முறை மற்றும் தவறான நடத்தை பற்றிய அனுபவங்களைக் கூறினர். யோசித்துப் பாருங்கள். பெண்கள் புகார் அளிக்கச் சென்ற காவல் நிலையத்திற்குள்ளேயே இது நடந்துள்ளது.

பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்களே இப்போது அச்சுறுத்தலாக மாறியுள்ளனர். தில்லி காவல்துறை யாருக்குப் பதிலளிக்க வேண்டும் என்று அனைவருக்குமே தெரியும்.

சாக்கேத் காவல் நிலையத்தின் முழு சிசிடிவி பதிவுகளும் பொதுவெளியில் வைக்கப்படவேண்டும். குற்றத்தின் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஷாஹீன், நஃபிசா உள்பட தில்லி காவல்துறையின் அராஜகத்திற்கு ஆளான அனைத்துப் பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

அமித் ஷா அவர்களே, நீங்களும் உங்களின் காவல்துறையும் பெண்களைக் கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறீர்கள்?” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Amit Shah and the police are afraid of women: Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER