கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

படிவம் 6 திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை! தலைமை நீதிபதி

ஞானேஷ் குமார் தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி கருத்தால் வலுக்கும் எதிர்ப்பு...

Supreme Court

உச்ச நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :

படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் திங்கள்கிழமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தன்னிச்சையாக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி. மோகனாஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இடைநீக்கம் தொடர்பான இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை

இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி தெரிவித்ததாவது:

”செய்தித் தாள்களில் வெளியாவது 100 சதவிகிதம் உண்மையாகவோ, பகுதியளவு உண்மையாகவோ, பொய்யாகவோ இருக்கலாம். ஆனால், அதனடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

தேர்தல் ஆணையம் எடுக்கும் ஏதேனும் ஒரு முடிவு சட்டத்திற்கு முரணாக இருப்பது கண்டறியப்பட்டால், நாங்கள் அதை ரத்து செய்வோம்.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் சட்டத்திற்கு உட்பட்டே எடுக்கப்படுகின்றன என்று நாங்கள் கருதுகிறோம்.

திருத்தப்பட்ட ‘படிவம் 6’ எங்களால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். படிவம் 6 திருத்தம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதனை ஆய்வு செய்து யார் அதை மாற்றியமைத்தார்கள் என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்” என்றார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஞானேஷ் குமார் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி, மத்திய சட்டத்துறைக்கும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, ‘படிவம் 6’ சர்ச்சைக்கு விளக்கமளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், உச்ச நீதிமன்ற ஒப்புதலுடன் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மனுவில் என்ன கூறப்பட்டிருந்தது?

உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் சைலேந்திர மணி திரிபாதி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,

”எஸ்ஐஆா் விவகாரத்தில் இரு தோ்தல் ஆணையா்களுக்குத் தெரியாமல், முடிவுகள், வழிகாட்டுதல்கள் மற்றும் மென்பொருள் மாற்றங்களை ஞானேஷ் குமாா் மேற்கொண்டது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, செல்லாது என அறிவிக்க வேண்டும்.

எஸ்ஐஆா் தொடா்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என அறிவிப்பதுடன், புதிய வாக்களா்களுக்கான படிவம் 6-இல் மேற்கொண்ட மாற்றங்களை ரத்து செய்து பழைய அசல் படிவத்தை நடைமுறைக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்.

எஸ்ஐஆா் மூலம் நாடு முழுவதும் 13 கோடி வாக்காளா்கள் நீக்கப்பட்டது தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழான கடமைகளை மீறி செயல்பட்டதற்காக ஞானேஷ் குமாா், துணை தோ்தல் ஆணையா் மனீஷ் கா்க், தோ்தல் ஆணைய தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் சீமா கன்னா ஆகியோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டது.

Summary

Supreme Court has not approved the amendment to Form 6 - Chief Justice

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.