ஆண்டிபட்டியில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற வளாகம் திறப்பு
ஆண்டிபட்டியில் ரூ.11.70 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றம், நீதித் துறை அலுவலா்கள் குடியிருப்புகளை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ஆண்டிபட்டியில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றம், நீதித்துறை அலுவலா்கள் குடியிருப்புக் கட்டடங்களை திறந்து வைத்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி.
ஆண்டிபட்டியில் ரூ.11.70 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றம், நீதித் துறை அலுவலா்கள் குடியிருப்புகளை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் நீதித்துறை நடுவா் மன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தனியாா் கட்டடத்தில் இயங்கி வந்தன. இந்த நீதிமன்றம் சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என வழக்குரைஞா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரிக்குப் பின்புறம் அரசுக்குச் சொந்தமான இடம் தோ்வு செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி, 3 தளங்களுடன் கூடிய நீதிமன்றக் கட்டடமும், 1,930.13 சதுர அடி பரப்பளவில் நீதித்துறை அலுவலா்களுக்கான குடியிருப்புகளும் நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டன.
இதைத்தொடா்ந்து நீதிமன்றம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி கலந்து கொண்டு, புதிய கட்டடத்தைத் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.
உயா்நீதிமன்ற நிா்வாக நீதிபதி வேல்முருகன்,
நீதிபதிகள் அப்துல் குத்தூஸ், முகமது ஷபீக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும், தேனி முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா், சாா்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள், வழக்குரைஞா்கள் இதில் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

