கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் எதுவும் நடக்கவில்லை! நிர்மல் குமார்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் முதல் சட்டம் - ஒழுங்கு வரை – அமைச்சர் நிர்மல் குமார் பதில்...

அமைச்சர் நிர்மல் குமார் - DNS
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் கனிமொழி வெளியிட்ட அறிக்கையில் உண்மையில்லை என்றும் பேரவை துணைத் தலைவர் விவகாரத்தில் விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை என்றும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் விஜய் கூடுதல் நிதியுதவி வழங்கியிருப்பது, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் விவகாரம், பேரவை துணைத் தலைவர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் விஜய் கூடுதல் நிதியுதவி வழங்கியுள்ளார். ஏற்கெனவே திமுக ஆட்சியில் இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. வழக்கம்போல இந்த விவகாரத்திலும் திமுக அரசியல் செய்ததே தவிர, ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. தற்போது முதல்வர் கூடுதல் நிதியுதவியை அறிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சட்டம் - ஒழுங்கு விவகாரம்:
கடந்த ஆறு மாதங்களாகச் சட்டம் - ஒழுங்கைச் சிறப்பாகக் கையாண்டு வருகிறோம். ஆனால், சட்டம் - ஒழுங்கு சரியில்லை என திமுக திட்டமிட்டு ஒரு பெரிய பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.
இந்த ஆட்சியில் 19 ஆயிரம் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் (History Sheeters) நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் 6,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2,800 வழக்குகள் மே 10 ஆம் தேதிக்கு முன்பே பதிவு செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்தவை. அவற்றையும் பதிவு செய்துள்ளோம்.
மேலும், 3,229 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, 152 பேரைத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை எந்தவிதத் தயக்கமுமின்றி, தவறு நடைபெறாமல் விரைந்து செயல்பட முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் ஆறு மாதங்களில் 5,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போதைய ஆட்சியில் 9,600-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது நடவடிக்கைகளும் 8,500 என்ற எண்ணிக்கையிலிருந்து 14 ஆயிரமாக அதிகரித்துள்ளன.
தீபாவளி தினத்தில் மட்டும் 8 கொலைச் சம்பவங்களும், ஒரு வாரத்தில் 40 கொலைச் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். தற்போது நடைபெறும் குற்றங்களில் பெரும்பாலானவை முதல் முறையாகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களாலும், தனிப்பட்ட பிரச்னைகளாலும் ஏற்படுகின்றன.
காவல்துறையில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு:
கடந்த இரண்டு ஆண்டுகளில் காவல்துறையில் ஒருவர்கூட புதிதாகப் பணியமர்த்தப்படவில்லை. தற்போது 10 ஆயிரம் பேரைக் காவல்துறையில் பணியமர்த்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியைப் போல் மெத்தனமாகச் செயல்படாமல், குற்றங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் விஜய் சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் சாதனைகள் மற்றும் புதிய திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினைப் போல் வீட்டில் இருந்துகொண்டு மகன், மருமகன் மூலம் ஆட்சி நடத்தவில்லை. முதல்வர் விஜய் நேரடியாகத் தலைமைச் செயலகத்திற்கு வந்து அனைத்து ஆலோசனைக் கூட்டங்களையும், ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம்:
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களைப் பார்த்துவிட்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அவர் கூறியதைப் போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.
சம்பந்தப்பட்ட நபரிடம் தொடர்புகொண்டு என்ன நடந்தது என்று விசாரிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், சமூக ஊடகங்களில் வந்த தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அறிக்கை வெளியிடுவது தவறானது. நானும் சமூக ஊடகங்களில் பார்த்த தகவலை அப்படியே பதிவு செய்தால் அதை ஏற்றுக்கொள்வார்களா?
யாருடைய தனிப்பட்ட விவகாரத்தையும் பேசுவதற்காக நான் இங்கு வரவில்லை. கனிமொழி தனது அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
பேரவை துணைத் தலைவர் விவகாரம்:
பேரவை துணைத் தலைவர் தொடர்பான விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மாறி மாறிப் பேசி வருகின்றனர். உண்மையில் உள்ளே என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சூரிய மின்சக்தி திட்டம்:
கூரை மீது சூரிய மின்தகடுகள் (Rooftop Solar) அமைக்க இதுவரை 35 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனை 50 ஆயிரம் இடங்களில் செயல்படுத்தினால் 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மேலும், மின்வாரியம் சார்பில் ரோந்து வாகனங்கள் மூலம் மின் பழுதுகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
முதல்வரை மாலை 6 மணிக்குப் பிறகு தொடர்புகொள்ள முடியவில்லை என்ற குற்றச்சாட்டு:
முதல்வரை மாலை 6 மணிக்குப் பிறகு தொடர்புகொள்ள முடியவில்லை என்று பரந்தாமன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறார்.
பரந்தாமனுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் அவர் இவ்வாறு பேசுகிறார். ஸ்டாலின் வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே தலைமைச் செயலகத்திற்கு வருவார்; மற்ற நேரங்களில் வீட்டிலிருந்தே செயல்படுவார். ஆனால், முதல்வர் விஜய் தினமும் தலைமைச் செயலகத்திற்கு வந்து ஆலோசனைக் கூட்டங்களையும், ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
à®à®³à¯à®³à®à¯à®à¯à®±à®¿à®à¯à®à®¿ மாவà®à¯à® à®à®à¯à®à®¿à®¯à®°à¯à®à¯à®à¯à®¤à¯ தவà¯à® à®à®à¯à®à®®à®©à¯à®± à®à®±à¯à®ªà¯à®ªà®¿à®©à®°à¯ à®à®°à¯à®³à¯ விà®à¯à®©à¯à®·à¯ à®à®ªà®¾à®à®à¯ à®à¯à®±à¯à®à¯à®à¯à®¯à¯à®¤à®¿ à®à®©à¯à®ªà¯à®ªà®¿à®¯à®¤à®¾à®à®µà¯à®®à¯, மதà¯à®ªà¯à®¤à¯à®¯à®¿à®²à¯ à®à®µà®°à®¤à¯ வà¯à®à¯à®à¯à®à¯à®à¯ à®à¯à®©à¯à®±à¯ தà¯à®¨à¯à®¤à®°à®µà¯ à®à¯à®¯à¯à®¤à®¤à®¾à®à®µà¯à®®à¯, à®à®¤à¯à®¤à¯ தà¯à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®à¯à®à®¿à®¯à®°à¯à®à¯à®à¯à®¤à¯ தனிப௠பாதà¯à®à®¾à®ªà¯à®ªà¯ à®à®¤à®¿à®à®¾à®°à®¿ நியமிà®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¤à®¾à®à®µà¯à®®à¯ à®à®®à¯à® வலà¯à®¤à®³à®à¯à®à®³à®¿à®²à¯ à®à¯à®¯à¯à®¤à®¿à®à®³à¯â¦
— Kanimozhi (à®à®©à®¿à®®à¯à®´à®¿) (@KanimozhiDMK) November 9, 2026
Summary
Nothing has happened regarding the district Collector issue: Nirmal Kumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


