மெலனியா டிரம்ப்புக்கு உக்ரைனின் உயரிய விருது!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்புக்கு உக்ரைனின் உயரிய விருது வழங்கப்படுவது குறித்து...

மெலனியா டிரம்ப் - AP
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்புக்கு உக்ரைனின் உயரிய விருது வழங்கப்படும் என அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றும் வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகளின் தலையீட்டில் நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ரஷியா ஆக்கிரமித்துள்ள ஒலேஷ்கி பகுதியில் தற்காலிகப் போர்நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தார்.
இதையடுத்து, அப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் தற்காலிகப் போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு அங்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சிக்கியிருந்த உக்ரைனிய மக்கள் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், மெலனியா டிரம்ப்பின் இந்த முயற்சியைப் பாராட்டி அவருக்கு உக்ரைனின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆர்டர் ஆஃப் ஓல்கா, ஃபர்ஸ்ட் கிளாஸ் எனும் விருது வழங்கப்படும் என உக்ரைனிய அதிபர் ஸெலன்ஸ்கி இன்று (நவ. 5) அறிவித்துள்ளார்.
போர்களுக்கு இடையே மிகவும் அரிதான இவ்வகை போர்நிறுத்தத்தை அமல்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட மெலனியா டிரம்ப், ரஷியா - உக்ரைன் பிரதிநிதிகளை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொள்வேன் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
President Zelenskyy has announced that U.S. First lady Melania Trump will be awarded one of Ukraine’s highest honors.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


