சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

ஆதரவை இழந்த நெதன்யாகு! இஸ்ரேலின் புதிய பிரதமர் ஐசென்கோட்?

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூட்டணிக் கட்சியின் ஆதரவை இழந்துள்ளது குறித்து...

Netanyahu loses religious party's support as rival tipped to form government

காடி ஐசென்கோட் - பிரதமர் நெதன்யாகு - AP

Updated On :

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீண்டகால கூட்டாளியான மரபுவாத யூதக் கட்சி ஒன்று அவர் பிரதமராகத் தொடர்வதற்கு ஆதரவு அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில், கடந்த அக்.27 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சித் தலைமையிலான கூட்டணி 53 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் கூட்டணி 48 இடங்களையும், முதல்முறையாக அரபு கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

இதையடுத்து, பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களை இதுவரை எந்தவொரு கட்சியும் பெறாத சூழலில், தேர்தல் முடிவுகளை சட்டப்பூர்வமான முடிவுகளாக இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கடந்த புதன்கிழமை (நவ. 4) அன்று ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அதிபர் ஹெர்சாக் புதிய ஆட்சி அமைப்பது குறித்து வெற்றி பெற்ற கட்சிகளுடன் இரண்டாவது நாளாக ஆலோசனை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பில், நெதன்யாகுவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஆதரவளித்து வந்த யுனைடெட் தோரா ஜுடாயிஸம் எனும் கட்சி இம்முறை அவர் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், 7 இடங்களைக் கைப்பற்றியுள்ள அந்தக் கட்சி அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐசென்கோட்டிற்கும் இதுவரை ஆதரவளிக்கவில்லை. மரபுவாத யூதர்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி மதப்பற்றுள்ள யூத மாணவர்களுக்கு ராணுவப்பணிக் கட்டாயமாக்கப்பட்டதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

புதிய ஆட்சி அமைக்க 28 நாள்கள் அவகாசம் வழங்கப்படும் சூழலில், மரபுவாத யூதக் கட்சி அல்லது அரபு கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஐசென்கோட் பிரதமராகப் பதவியேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலில், நெதன்யாகு அரசு குறித்து மக்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால், ஐசென்கோட்டிற்கு ஆதரவளிக்க கட்சிகள் முன்வரக் கூடும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

an ultra-Orthodox Jewish party a long-time ally of Israeli PM Netanyahu is not extending its support for him to continue as Prime Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER