அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபி
ஜந்தர் மந்தரில் போராட அனுமதி கேட்ட 30 நிமிடத்தில் அது போராடுவதற்கான இடமில்லை என அறிவிக்கப்படட்து என சிஜேபி தெரிவித்துள்ளது தொடர்பாக...
ஜந்தர் மந்தர் - PTI
ஜந்தர் மந்தரில் போராட அனுமதி கேட்ட 30 நிமிடத்தில் அது போராடுவதற்கான இடமில்லை என அறிவிக்கப்பட்டதாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா திங்கள்கிழமை (அக். 12) தெரிவித்துள்ளார்.
1993 ஆம் ஆண்டு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் இடமாக தில்லியில் நாடாளுமன்றம் அருகேவுள்ள ஜந்தர் மந்தர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தற்போது வரை, பல்வேறு விதமான போராட்டங்கள் ஜந்தர் மந்தரில் நடைபெற்றன. அந்த வரிசையில், அண்மையில் நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டமும் அங்குதான் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக எழுந்த புகார் எழுந்தது. எனவே, அவர் பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் சிஜேபியினர் போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி தரவில்லை. மேலும், அங்கு போராட முயன்றவர்களை காவல்துறை கைது செய்தது.
இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தும் இடமாகத் திகழ்ந்த ஜந்தர் மந்தரில் இனிமேல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை எனவும் அதற்கு மாற்று இடங்களையும் தில்லி காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அசுதோஷ் ரங்கா, “ஜந்தர் மந்தரில் போராட தில்லி காவல்துறையினரிடம் நாங்கள் அனுமதி கேட்டோம். அடுத்த 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
CJP spokesperson Ashutosh Ranga stated on Monday (Oct. 12) that within 30 minutes of seeking permission to protest at Jantar Mantar, it was declared that the site was not designated for protests.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


