தில்லி ஜந்தர் மந்தரில் போராடத் தடை: உச்சநீதிமன்றத்தில் மனு!
தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்தத் தடை விதித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்...

தில்லி ஜந்தர் மந்தர் சாலை... - ENs
தில்லி ஜந்தர் மந்தரில் போராடத் தடை விதித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. பல்வேறு தடைகளை மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தில்லியில் வழக்கமாக போராட்டங்கள் நடக்கும் ஜந்தர் மந்தரில் போராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் இனி போராட்டத்திற்கான இடம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பதிலாக, ராம்லீலா மைதானம் (Ramlila Ground), புராடி மைதானம், கிழக்கு தில்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு சிஜேபி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் தடையை மீறி ஜந்தர் மந்தர் அருகே போராட்டம் நடத்திய சிஜேபி கட்சியினர் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில் தில்லி ஜந்தர் மந்தரில் போராடத் தடை விதித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தருக்கு பதிலாக அறிவிக்கப்பட்டுள்ள ராம் லீலா மைதானம் போன்ற இடங்கள் சரியாக இருக்காது, ஏனெனில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் தில்லியின் குப்பைக் கிடங்குகளுக்கு அருகில் அமைந்துள்ளது, பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு அவை பொருத்தமான இடங்கள் அல்ல, எனவே தில்லி அரசின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Summary
Plea In SC Challenges Restrictions On Protests At Delhi Jantar Mantar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

