அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

நாடே ஜந்தர் மந்தராக மாறும்: அபிஜீத் தீப்கே ஆவேசம்!

ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த நாடே ஜந்தர் மந்தராக மாறும் என அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

C JP founder Abhijeet Dipke

அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்

Published On :

ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த நாடே ஜந்தர் மந்தராக மாறும் என அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

எஸ்ஐஆர் நடைமுறையில் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிஜேபி சார்பில் தில்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் என பலரையும் காவல்துறை கைது செய்தனர்.

போராட்டத்தை ஒருங்கிணைத்த சிஜேபியின் நிறுவனரான அபிஜீத் தீப்கே உள்பட முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படாது என தில்லி காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தில்லியில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மாற்றாக வேறு இடங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருந்தது.

அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜந்தர் மந்தர் இனி போராட்டங்கள் நடத்துவதற்கான இடமாக இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, ராம்லீலா மைதானம், புராடி மைதானம் மற்றும் கிழக்கு தில்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கு சிஜேபி சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “ஜந்தர் மந்தரை போராட்டக் களம் என்ற வரைமுறையில் இருந்து அவர்கள் நீக்கிவிட்டனர். ஆம். இனி அது போராட்டக் களம் அல்ல. ஏனெனில், ஒரு கோழை சர்வாதிகாரி அதை ஒரு போர்க்களமாக மாற்றிவிட்டார். இனி இந்த நாடு முழுவதும் ஜந்தர் மந்தராக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், “இன்று ஜந்தர் மந்தரை போராட்டக் களம் என்ற நிலையிலிருந்து மோடி நீக்கிவிட்டார். நாளை அவர் ஜனநாயகத்தையே நீக்குவார். அந்த சர்வாதிகாரியின் பிரச்னை ஒருபோதும் போராட்டக்களம் அல்ல. மக்கள் போராடுகிறார்கள் என்ற எண்ணமே அவர்களின் பிரச்னை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Abhijit Deepke has stated that with permission for protests at Jantar Mantar being denied, the entire country will turn into Jantar Mantar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER