தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்!
தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

ஜந்தர் மந்தர் - ANI
தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரை போராட்டம் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ இடமாக அறிவிக்கப்பட்டிருந்த ஆணையை உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தை மேற்கோள்காட்டி, தில்லி காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், போராட்டம் நடத்துவதற்கு வேறு மூன்று இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் உள்ள கடமைப் பாதை பகுதி போராட்டங்கள் நடத்தும் இடமாக திகழ்ந்த நிலையில், கடந்த 1988-ல் மாபெரும் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. அதன்பின்னர், அப்பகுதியில் போராட்டம் நடத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, 1993-ல் நாடாளுமன்றம் அருகேவுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி போராட்டம் நடத்தும் களமாக இருந்த நிலையில், அதிகாரப்பூர்வ போராட்ட இடமாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்க நாளில் சிஜேபி கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்ட நிலையில், அவர்கள் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், இளைஞர்கள், காவலர்கள் இடையே மோதல் வெடித்தது.
தற்போது தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த சிஜேபி கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்த நிலையில், தில்லி காவல்துறை இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”தில்லியில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மாற்றாக வேறு இடங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருந்தது.
அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜந்தர் மந்தர் இனி போராட்டங்கள் நடத்துவதற்கான இடமாக இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, ராம்லீலா மைதானம் (Ramlila Ground), புராடி மைதானம் மற்றும் கிழக்கு தில்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று இடங்களிலும் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான விரிவான மற்றும் திருத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தனியாக வெளியிடப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Delhi's Jantar Mantar is no longer a venue for protests — Ministry of Home Affairs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


