திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!பஞ்சாப் தேர்தல்! பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி அறிவிப்பு!திருப்பரங்குன்றம்: வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம்மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்விகார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! விசாரணை நவ. 27-க்கு ஒத்திவைப்பு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை!யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு...

Tiruvannamalai

பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை. - Dinamani

Updated On :

விழுப்புரம்: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சுமார் 30 லட்சம் பக்தர்கள் குவிந்து இருப்பதால் திருவண்ணாமலை பக்தர்களால் நிரம்பி வழிகிறது.

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் தலமாகவும் விளங்கும் உண்ணாமுலை அம்மன் உடனுறை அருணாசலேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றறத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் காலையில் ஒவ்வொரு வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் ஏழாம் நாளான நவம்பர் 21-ஆம் தேதி விநாயகர் தேர் வடம்பிடித்தலும், தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மகா தேரோட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்தும் விநாயகர், சந்திரசேகர், பஞ்சமூர்த்திகள் ஒவ்வொரு வாகனங்களில் புறப்பாடாகி காட்சியளித்தனர்.

மகா தீபத் திருவிழாவையொட்டி தீபம் ஏற்றப்படும் கொப்பரை 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மகா தீபத் திருவிழா நடைபெறுகிறது.

இதையொட்டி, அருணாசலேசுவரர் கோயில் சுவாமி சந்நிதி எதிரில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றறப்பட்டது. ஏகன், அநேகன் தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைத்து, பஞ்சபூதங்களும் தாமே என்பதை இறைவன் எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றறது. இதைத் தொடர்ந்து கோயில் பிரம்ம தீர்த்தக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. பின்னர், தங்கக் கொடிமரம் முன் தீப தரிசன மண்டபத்தில் மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதன் பின்னர், ஆணும், பெண்ணும் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்த, உமையவளுக்கு தனது இடபாகத்தை அளித்து, அர்த்தநாரீசுவரராக அருணாசலேசுவரர் எழுந்தருளினார். ஆண்டுக்கு ஒருமுறை சில நிமிஷங்கள் மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீசவரர் ஆனந்தாண்டவமாடி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதைத் தொடர்ந்து தங்கக் கொடிமரம் முன் அகண்டத்தில் தீபச்சுடர் ஏற்றறப்படவுள்ளது. தொடர்ந்து மலையே மகேசன் என போற்றி வணங்கப்படும் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபத் திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். சுமார் 30 லட்சம் பக்தர்கள் குவிந்து இருப்பதால், திருவண்ணாமலை நகரமே பக்தர்களால் நிரம்பி வழிகிறது.

Story image

வடக்கு மண்டல ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு தலைமையில் சுமார் 15,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையைச் சுற்றி 31 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அருணாசலேசுவரரர் கோயில், கிரிவலப் பாதைகள், மாடவீதிகள் உள்ளிட்ட பகுதிகள் என மொத்தமாக 1,108 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாறை அறை மூலம் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இதில் சுமார் 700 கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டவையாகும். மேலும் 15-க்கும் மேற்பட்ட டிரோன்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Summary

Thiruvannamalai Deepam Festival! 3 million devotees participate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.