பஞ்சாப் தேர்தல்! பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி அறிவிப்பு!திருப்பரங்குன்றம்: வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம்மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்விகார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! விசாரணை நவ. 27-க்கு ஒத்திவைப்பு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை!யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

திருப்பரங்குன்றம்: வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறித்து...

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம் - படம் - தினமணி

Updated On :

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 24) தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மலைமேல் மகா தீபம் ஏற்றும் வைபவம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

​மலை உச்சியிலுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் எனப் பொதுமக்களும், பக்தர்களும், இந்து அமைப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

​இருப்பினும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை இரவு வரை மாவட்ட ஆட்சியரோ, மாநகர காவல் ஆணையரோ திருப்பரங்குன்றம் மலைப்பகுதிக்கு நேரில் வந்து எவ்வித ஆய்வும் மேற்கொள்ளவில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான குழுவும் இதுவரை முறையாக அறிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயப்பிரதீபா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதே சமயத்தில் வழக்கமாக மகா தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தின் மேல் பகுதியில், தீபக் கொப்பரை அமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தீவிரமாக நடைபெற்றன. திருவண்ணாமலையிலிருந்து வருகை தந்துள்ள சிறப்புக் குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

​மலைமேல் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக 4.5 அடி உயரமும், 70 கிலோ எடையும் கொண்ட தாமரை வடிவக் கொப்பரை தயார்படுத்தப்பட்டுள்ளது. இதில் 400 கிலோ நெய், 150 மீட்டர் நீளமுள்ள காடா துணி மற்றும் 5 கிலோ சூடம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைத் திருவண்ணாமலை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

​அதேவேளையில், மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் இதுவரை எவ்வித முன்னேற்பாட்டுப் பணிகளும் தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக நிர்வாகத் தரப்பிலிருந்தும் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாதது பக்தர்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary

In preparation for the Karthigai Deepam festival at Tirupparankundram, work on lighting the 'Maha Deepam' (great lamp) at its customary location was intensified on Tuesday (Nov. 24).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.