திருப்பரங்குன்றத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையில் பக்தர்களின் திரளான கிரிவலம் பற்றி...

திருப்பரங்குன்றம் மலையில் கிரிவலம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்து வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இன்று மாலை உச்சி பிள்ளையார் கோயிலில் அருகே கொப்பறையில் தீபம் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பழமையான தாமிரக் கொப்பரை மற்றும் பிரம்மாண்ட திரி ஆகியவை தயார் செய்யப்பட்டு மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. சுமார் 4 அடி உயரமும், 70 கிலோ எடையும் கொண்ட இந்தத் தாமிரக் கொப்பரையில் சுமார் 400 லிட்டர் நெய் நிரப்பப்படுகிறது. இதில் 150 மீட்டர் நீளமுள்ள காடா துணியால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட திரி பயன்படுத்தப்படுகிறது. மேலும், 5 கிலோ கற்பூரம் கொண்டு மகா தீபம் ஏற்றப்படுகிறது.
மேலும், உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணிலும் தீபம் ஏற்றப்படும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான பகுதியில் குடும்பம் குடும்பமாக மலையை சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

