திருவண்ணாமலை தீபத் திருவிழா: 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் பற்றி...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதுமிருந்து 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. - கோப்புப் படம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதுமிருந்து 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையை விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ச. ஸ்ரீதரன் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய்யின் ஆணைக்கினங்க போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு இயக்கமாக 7,753 சிறப்பு பேருந்து நடைகள் இயக்கப்பட உள்ளதாக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் திரு.ச. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இதில், 22.11.2026 ஞாயிற்றுக் கிழமை விழுப்புரம் மண்டலத்திலிருந்து 195 சிறப்பு நடைகளும், கடலூர் மண்டலத்திலிருந்து 101 சிறப்பு நடைகளும், திருவண்ணாமலை மண்டலத்திலிருந்து 566 சிறப்பு நடைகளும், வேலூர் மண்டலத்திலிருந்து 205 சிறப்பு நடைகளும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து 35 சிறப்பு நடைகளும், திருவள்ளுர் மண்டலத்திலிருந்து 30 சிறப்பு நடைகளும், என 1132 பேருந்து சிறப்பு நடைகளும்,
23.11.2026 திங்கட்கிழமை அன்று பொளர்ணமி தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மண்டலத்திலிருந்து 284 சிறப்பு நடைகளும், கடலூர் மண்டலத்திலிருந்து 180 சிறப்பு நடைகளும், திருவண்ணாமலை மண்டலத்திலிருந்து 802 சிறப்பு நடைகளும, வேலூர் மண்டலத்திலிருந்து 485 சிறப்பு நடைகளும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து 82 சிறப்பு நடைகளும், திருவள்ளூர் மண்டலத்திலிருந்து 45 சிறப்பு நடைகளும், என 1878 பேருந்து சிறப்பு நடைகளும்,
24.11.2026 செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபம் மற்றும் பொளர்ணமி தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மண்டலத்திலிருந்து 500 சிறப்பு நடைகளும், கடலூர் மண்டலத்திலிருந்து 291 சிறப்பு நடைகளும், திருவண்ணாமலை மண்டலத்திலிருந்து 1212 சிறப்பு நடைகளும், வேலூர் மண்டலத்திலிருந்து 818 சிறப்பு நடைகளும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து 152 சிறப்பு நடைகளும், திருவள்ளுர் மண்டலத்திலிருந்து 82 சிறப்பு நடைகளும் என 3055 பேருந்து சிறப்பு நடைகளும்,
25.11.2026 புதன்கிழமை அன்று விழுப்புரம் மண்டலத்திலிருந்து 332 சிறப்பு நடைகளும். கடலூர் மண்டலத்திலிருந்து 231 சிறப்பு நடைகளும் திருவண்ணாமலை மண்டலத்திலிருந்து 874 சிறப்பு நடைகளும், வேலூர் மண்டலத்திலிருந்து 345 சிறப்பு நடைகளும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து 102 சிறப்பு நடைகளும், திருவள்ளுர் மண்டலத்திலிருந்து 63 சிறப்பு நடைகளும், என 1947 பேருந்து சிறப்பு நடைகளும்,
22.11.2026 முதல் 25.11.2026 வரை நான்கு நாட்களுக்கு மொத்தம் 8012 சிறப்புபேருந்துகள் கோயம்பேடு மாதவரம்,அடையாறு, புதுச்சேரி, திண்டிவனம், சேலம், பெங்களூர், திருப்பத்தூர், திருப்பூர், கோயம்பத்தூர். வேலூர், ஏற்காடு, ஆரணி, செய்யார், காஞ்சிபுரம், வந்தவாசி சேத்பட் மேல்சோழகுப்பம், விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், திருக்கோயிலூர், விருத்தாசலம், மணலூர்பேட்டை, தண்ராம்பட்டு, தாணிப்பாடி, கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு சிறப்பு நடைகள் இயக்கப்பட உள்ளன.
எனவே பொது மக்கள் இந்த நல்வாயப்பை பயன்படுத்தி கார்த்திகை தீப திருநாளை மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் கொண்டாட வேண்டும் என மேலாண் இயக்குநர் ச.ஸ்ரீதரன் தெரிவித்துக்கொண்டார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Thiruvannamalai Deepam Festival: 8,012 special buses to be operated across Tamil Nadu!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


