வேகம் முக்கியம்! நாரா லோகேஷ் கிண்டலுக்கு பதில் கொடுத்த அமைச்சர் கீர்த்தனா!கணவரின் தோழியைக் கொல்ல ரூ.13 லட்சம் கூலி! துப்புத் துலக்க உதவிய 300 சிசிடிவிகள், ஜிபிஎஸ் டிராக்கிங்!ஜோதிடர் பேச்சால் மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கும் தவெக அரசு: மு.க. ஸ்டாலின்நவ. 23-இல் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

வேகம் முக்கியம்! நாரா லோகேஷ் கிண்டலுக்கு பதில் கொடுத்த அமைச்சர் கீர்த்தனா!

வேகம் முக்கியம் என்ற உள் கருத்தோடு பதிவிட்டிருந்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷூக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலளித்துள்ளார்.

Minister Keerthana — Andhra Minister Nara Lokesh.

அமைச்சர் கீர்த்தனா - ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்.

Updated On :

வேகம் முக்கியம் என்பது போல பதிவிடிருந்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கிண்டலுக்கு பதில் கொடுத்துள்ளார் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா.

ஆந்திர மாநிலத்தில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு முன்மொழிவுகள் பெறப்பட்ட முதலீட்டு உச்சிமாநாடு நடைபெற்று ஒரு வாரம் ஆகிறது.

இந்த உச்சிமாநாட்டின் பணிகளில் ஈடுபட்டிருந்த சிலர் ஊடகங்களில் அதிக கவனம் பெற்றிருந்தனர். காரணம், இவர்கள் ஆந்திரத்துக்கு தகவல்களை கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஜூலை மாதம் தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான வழிகாட்டுதல் தமிழ்நாடு நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட 15 பணியாளர்கள் என்றும் முக்கிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதற்கு, வழிகாட்டுதல் தமிழ்நாடு அமைப்பிலிருந்து வெளியேறிய முன்னாள் ஊழியர் ஒருவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சில தகவல்களையும் விளக்கியிருந்தார்.

இது தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதனை விமர்சித்து ஆந்திர தொழில்துறை அமைச்சர் நாரா லோகேஷ் ஒரு கருத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதில், முக்கியச் செய்தி: ஆந்திரப் பிரதேசத்தின் மிக ரகசியமான முதலீட்டு உத்தி கசிந்துவிட்டது. அதுதான், 'முதலீட்டாளர்களுக்கு அதே நாளில் பதிலளிப்பது'. தாராளமாக இதைப் பின்பற்றுங்கள்! என்று தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு சொல்வது போல பதிவிட்டிருந்தார்.

அதாவது, முதலீட்டாளர்கள் தொடர்புகொண்டால், உடனடியாக அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும், காலம் தாழ்த்தக் கூடாது, வேகம்தான் முக்கியம் என்பது போல கருத்திட்டிருந்தார்.

ஏற்கனவே, தமிழ்நாட்டில், தொழில் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள் பரவி வரும் நிலையில், ஆந்திர அமைச்சரின் இந்த கிண்டல் பதிவு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல மாறியது.

உடனடியாக இந்த பதிவுக்கு தமிழக அமைச்சர் கீர்த்தனா தன்னுடைய பதிலை பதிவிட்டுள்ளார்.

அதில், விரைவான பதில்கள் நல்லவைதான், ஆனால் இன்னும் வேகமான செயல்பாடு? அதைவிடச் சிறப்பு!

தமிழ்நாடு, 'வெற்றி முதலீடு மற்றும் மாற்றத்திற்கான மாநாடு 2026' (VETTRI Investment & Conversion Conclave 2026)-ன் இரண்டாவது பதிப்பிற்குத் தயாராகி வருகிறது!

எங்கள் இலக்கு தெளிவானது: முதலீட்டு உறுதிமொழிகள், மாற்றத்திற்கான மைல்கற்கள், களத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையின் கீழ், முதலீட்டு உறுதிமொழிகளை உறுதியான பலன்களாக மாற்றவும், களத்தில் திட்டவட்டமான) முடிவுகளை வழங்கவும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

இன்னும் 4 நாட்களே உள்ளன!

25 நவம்பர் 2026. என்று பதிவிட்டு பதிலளித்துள்ளார்.

முன்னதாக, வழிகாட்டுதல் தமிழ்நாடு அமைப்பில் பணியாற்றிய ஊழியர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

Summary

Speed ​​is key! Minister Keerthana responds to Nara Lokesh’s jibe!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.