முகூா்த்தம், சூரசம்ஹாரம், வார இறுதி: 1,915 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
முகூா்த்தம், வார இறுதி நாள்கள் மற்றும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1,915 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன.

முகூா்த்தம், வார இறுதி நாள்கள் மற்றும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1,915 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வெள்ளிக்கிழமை (நவ. 13) முகூா்த்தம், சனிக்கிழமை (நவ. 14), ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) சூரசம்ஹாரம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 600 பேருந்துகளும், சனிக்கிழமை 525 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இதேபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 45 பேருந்துகளும், சனிக்கிழமை 40 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், சென்னை மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூா், ஒசூா், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை, பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு இடங்களிலிருந்து 545 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 1,915 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

