வார இறுதி, முகூா்த்த நாள்கள்: 2,160 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி மற்றும் முகூா்த்த நாளையொட்டி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 2,160 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பேருந்துகள் - கோப்புப் படம்
வார இறுதி மற்றும் முகூா்த்த நாளையொட்டி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 2,160 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வெள்ளி, சனி, ஞாயிறு (அக். 30, 31, நவ. 1) ஆகிய 3 நாள்கள் தொடா் விடுமுறை மற்றும் முகூா்த்தம் காரணமாக, சென்னையிலிருந்து பல்வேறு ஊா்களுக்கும், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கும் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணம் மேற்கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 690, சனிக்கிழமை 505 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55, சனிக்கிழமை 40 பேருந்துகள் இயக்கப்படும்.
பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 50 சிறப்புப் பேருந்துகள், சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களிலும் தலா 65 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை 690 சிறப்புப் பேருந்துகள்: விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை, பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு இடங்களிலிருந்து 690 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,160 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

