ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்! தவெகவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி

பாஜகவுக்கு வாக்குகளைத் திருட மட்டுமே தெரியும்: கார்கே குற்றச்சாட்டு!

பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு வாக்குகளைத் திருட மட்டுமே தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

Mallikarjun Kharge

மல்லிகார்ஜுன கார்கே - கோப்புப் படம்

Updated On :

பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு வாக்குகளைத் திருட மட்டுமே தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நண்பர்களே, இது பண்டிகைக் காலம், ஆனால் இந்த நேரத்தில்கூட மக்கள் அனைவரும் கடுமையான விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறீர்கள். இந்த அரசுக்கு அதுபற்றி எந்தக் கவலையும் இல்லை. அவர்களுக்கு வாக்குகளைத் திருட மட்டுமே தெரியும். மிகப்பெரிய அளவில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்தத் திருட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

லட்சக்கணக்கான இந்தியர்களின் வாக்குரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரே இதற்கு முழுப் பொறுப்பு. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரிலேயே அவர் இவற்றைச் செய்துள்ளார்.

ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும். வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கை இதுவே.

இதன் ஒரு பகுதியாக, ’வாக்கைக் காப்போம் தேசத்தைக் காப்போம்’ என்ற மாபெரும் பேரணி புது தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1 அன்று நடைபெறவுள்ளது.

அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காக்க பேரணியில் இணைந்து, இந்த முன்னெடுப்பை வெற்றிபெறச் செய்ய கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு எதிரான போராட்டங்களும், வாக்கு மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளும் இந்தியா முழுவதும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில் இந்தியா கூட்டணியின்பேரணி நடைபெறுகிறது.

இப்போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பண்டிகைக் கால விற்பனை முடியும் வரை பேரணியைத் தள்ளிவைக்குமாறு தில்லியின் உள்ளூர் வணிக அமைப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில், காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது.

Summary

Congress leader Mallikarjun Kharge has alleged that the BJP-led central government knows only how to steal votes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.