மணிப்பூரில் மீண்டும் ரத்தம்! இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? யார் பொறுப்பு? கார்கே
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது குறித்து பாஜக அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி...

மல்லிகார்ஜுன கார்கே - ANI
மணிப்பூரில் 3 ஆண்டுகளாக அமைதியில்லை என்றும் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"பாஜகவின் திறமையின்மையால் மணிப்பூர் மீண்டும் ரத்தம் சிந்துகிறது!
மணிப்பூரில் சமீபத்திய வன்முறைச் சம்பவங்களில் நான்கு அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மே 2023 முதல், 300-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 24,530 பேர் நிவாரண முகாம்களில் தங்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் மற்றும் நலிவடைந்த குடும்பங்கள் இந்த துயரத்தின் சுமையை தொடர்ந்து தாங்கி வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணிப்பது, முதல்வரை மாற்றுவது, பாஜக அரசை மீண்டும் நிறுவுவது என பாஜகவின் அரசியல் சூழ்ச்சிகள் எந்த அமைதியையும் ஏற்படுத்தவில்லை.
வன்முறை ஏற்பட்டது முதல், கிட்டத்தட்ட 29 மாதங்களாக மணிப்பூரில் காலடிகூட எடுத்து வைக்காத பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் தனது வாக்குறுதியில் படுதோல்வி அடைந்துள்ளார்.
மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்வதிலும், அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதிலும், தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் பாஜக தோல்வியடைந்துவிட்டது.
பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மூன்று கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்....
ஜூன் 2023-ல் அமித் ஷாவால் அமைக்கப்பட்ட அமைதிக் குழு என்ன ஆனது? இந்த பதற்றமான எல்லை மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கவும், குடிமக்களைப் பாதுகாக்கவும், தொடரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளவும் என்ன உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா மித்தல் குழுவின் பரிந்துரைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நிவாரண முகாம்களில் 31 இயற்கைக்கு மாறான மரணங்கள் நிகழ்ந்ததாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஏன் இன்னும் இடம்பெயர்ந்துள்ளனர்? பெண்கள், குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் மறுவாழ்வை உறுதி செய்ய என்ன செய்திருக்கிறீர்கள்?
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, 300-க்கும் மேற்பட்ட மரணங்கள், குடியரசுத் தலைவர் ஆட்சி மற்றும் முதல்வர் மாற்றம் ஆகியவற்றுக்குப் பிறகு, இந்த மாபெரும் நிர்வாகத் தோல்விக்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமரும் உள்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாக வேண்டும்?
மணிப்பூர் நீதி, கண்ணியம், அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் அமைதிக்குத் தகுதியானது.
ஒரு எல்லை மாநிலம் என்பதால், அதன் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகப் பணயக் கைதியாக வைத்திருக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
Manipur is bleeding again because of BJPâs incompetence!
— Mallikarjun Kharge (@kharge) October 21, 2026
The horrific killing of four innocent civilians in the latest spate of violence is deeply condemnable. My heartfelt condolences to the bereaved families.
Since May 2023, over 300 precious lives have been lost, whileâ¦
Summary
There has been no peace in Manipur for 3 years, Who is responsible? Kharge asks modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

