சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கேவுக்கு நிபந்தனை ஜாமீன்!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து...

Cockroach Janta Party (CJP) National Convener Abhijeet Dipke

அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்

Updated On :

தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமையில் தேசியக் கொடி ஏந்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், போராட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவை தில்லி காவல்துறை கைது செய்தது.

இந்த நிலையில், தீப்கேவுக்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அமைதிப் பத்திரத்தில் அவர் கையெழுத்திட்டதும் விடுவிக்கப்படுவார் என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, தேசியக் கொடியுடன் போராடிய சிஜேபியினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் வெள்ளிக்கிழமை (அக். 16) போராட்டம் நடத்தப்படும் என சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அழைப்பு விடுத்தார். இருப்பினும், போராட்டக் களத்துக்கு செல்வதற்கு முன்பே தடுக்கப்பட்டு, தில்லி காவல்துறையினரால் அபிஜீத் கைது செய்யப்பட்டார்.

Summary

Delhi Special Executive Magistrate grants bail to CJP founder Abhijeet Dipke

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER