திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியில்லை! - அபிஜீத் தீப்கே

உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியிடாது என்று கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே திட்டவட்டம்...

C JP founder Abhijeet Dipke

அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்

Updated On :

உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியிடாது என்றும், எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு (2027) மே மாதம் 403 இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜவாதி, காங்கிரஸ் கட்சிகள் இடையே தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

அதேபோன்று, ஆளும் பாஜக அரசு, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் 181 தொகுதிகளைக் கேட்ட காங்கிரஸுக்கு முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 26 தொகுதிகளை ஒதுக்கிய சமாஜவாதி, 5 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், தேசிய அளவில் புகழ்பெற்ற கரப்பான் பூச்சி கட்சி, வரவிருக்கும் உத்தரப் பிரதேசத் தேர்தலில் போட்டியிடாது என்று அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

சத்ரபதி சம்பாஜிநகரில் அபிஜீத் தீப்கே நேற்று (நவ. 24) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “நாங்கள் தேர்தலை எதிர்கொள்ளப் போவதில்லை. ஆனால், தேர்தல்கள் இளைஞர்களை மையப்படுத்தி நடக்க வேண்டும்.

அது சாதி மற்றும் மதத்துடன் தொடர்பில்லாததாகவும் இருக்க வேண்டும். நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு சாதி, மதத்தின் அடிப்படையில் போட்டியிடப் போகிறோம்? இந்த உலகம் செய்யறிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது” என்றார்.

Summary

The Cockroach Janta Party (CJP) will neither contest elections nor support any political party in the upcoming Uttar Pradesh polls, CJP convenor Abhijeet Dipke said on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.