பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்
பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம் என மரகதம் குமரவேல் பேச்சு
முதல்வர் விஜய்யுடன் மரகதம் குமரவேல் - கோப்புப் படம்
இடைத்தேர்தலில், அதிமுக, திமுக செய்த பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்று இன்று எம்எல்ஏ ஆகியிருக்கிறோம் என்று மதுராந்தகம் தவெக எம்எல்ஏ மரகதம் குமரவேல் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் இன்று எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் பின்னர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
அப்போது பேசிய மரகதம் குமரவேல், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக, திமுக செய்த பொய் பிரசாரங்களை எல்லாம் மீறி, நாங்கள் வெற்றி பெற்று இன்று எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளோம்.
ராஜிநாமா செய்தோம், தவெக குதிரைபேரத்தில் ஈடுபடுகிறது என்றெல்லாம் அதிமுகவும் திமுகவும் பொய் பிரசாரங்களை செய்தனர்.
எவ்வளவு பொய் பிரசாரம் செய்தாலும், அதிமுக - திமுக இணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்க திட்டமிட்டதால்தான் நாங்கள் வெளியே வந்தோம் என்பதை மதுராந்தகம் மக்களிடம் எடுத்துச் சொன்னோம்.
பொய் பிரசாரங்களை முறியடித்து, சுமார் 20 நாள் பிரசாரம் நடந்தது. எங்களுக்கு அவ்வளவு பிரச்னை நடந்தது, பெண் என்றும் பாராமல் இழிவுபடுத்தினார்கள். புரட்சித் தலைவி ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனாலும் தமிழக முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதிக்கு சூறாவளி பிரசாரம் செய்து எங்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
என் மீது என்னுடைய மதுராந்தகம் தொகுதி மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கையை நிறைவேற்றுவேன். அனைத்து வசதிகளையும் பெற்றுத் தருவேன் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

