அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் சிஜேபி போராட்டம்! பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது! தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக! - கனிமொழி விமர்சனம் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம் சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!

சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க முடியாது! கனிமொழி

தில்லியில் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட சிஜேபி கட்சியினர் கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி எதிர்ப்பு...

Kanimozhi MP

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Published On :

தில்லியில் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட சிஜேபி கட்சியினர் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டதையடுத்து கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது.

சிஜேபிக்கு ஆதரவாக சென்னையிலும் இன்று பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. சென்னை சேப்பாக்கம், பெசன்ட் நகர் பகுதிகளில் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர், காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,

"இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும்தான் உறுதியாகிறது.

தில்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக!" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தில்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்ட அபிஜீத் தீப்கே உள்ளிட்டோரை காவல்துறை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மற்றொரு பதிவில், "தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி அமைதியான முறையில் போராடிய சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே-வை, விமானத்திற்குள்ளேயே வைத்துத் தடுத்து வைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

45 மெட்ரோ நிலையங்களை மூடியும், 250-க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்தும், இணையச் சேவையைத் துண்டித்தும், 25,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் குவித்தும், அறிவிக்கப்படாத அவசரநிலைக் காலச் சூழலை உருவாக்கி தில்லியை ஒரு கோட்டையாக மத்திய அரசு மாற்றியுள்ளது.

'பாதுகாப்பு' என்ற காரணத்தைக் காட்டி, அரசியலமைப்பின் 19-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை என்றால், பிறகு ஜனநாயகத்தில் எஞ்சியிருப்பதுதான் என்ன?

அபிஜீத் தீப்கே (Abhijeet Dipke) உள்ளிட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கிவிட முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

The voice of democracy cannot be suppressed by authoritarianism: Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER