தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை! காவலில் எடுக்கப்படும் நபா் 24 மணி நேரத்துக்குள் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்நாட்டில் அராஜகத்தைப் பரப்பும் ராகுலுக்கு தக்க பதிலடி: அமித் ஷா உறுதி6 ஆண்டுகள் பணிபுரியும் அக்னிவீரா்கள் ராணுவத்தில் நிரந்தர வீரா்களாக்கப்படுவா்: பாதுகாப்புத் துறை அதிகாரிகள்வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கி ஆணைசீனாவின் சாதனையை முறியடிக்கும் ரயில் வழித்தடம்! ரூ. 1.31 லட்சம் கோடியில் அரசு திட்டம்!வானிலை: தமிழகத்தில் நாளை (நவ. 6) கனமழைக்கு வாய்ப்பு!தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழி எம்.பி. கேள்வி

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரை மீன்வளத் துறை அமைச்சர் சந்திக்கவில்லை என கனிமொழி எம்.பி. கூறியது குறித்து...

DMK MP Kanimozhi | Minister Srinath

திமுக எம்.பி. கனிமொழி | மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்

Updated On :

சென்னை காசிமேட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் முரசு புயலில் சிக்கி உயிரிழந்தபோதிலும் பாதிக்கப்பட்டோரை மீன்வளத் துறை அமைச்சர் சந்திக்காதது ஏன் என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிப்பதற்காக அக். 29-ல் 9 மீனவர்கள் கடலுக்குள் சென்றபோது, முரசு புயல் உருவானதால் ஆந்திரத்தின் ராமாயபட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் நவ. 2-ல் தங்களின் படகுகளை நிறுத்தினர்.

இருந்தபோதிலும் கடலோர காவற்படை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் ராமாயபட்டினம் நோக்கி 9 மீனவர்களும் சென்றதால் புயலில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் மாயமானட் நிலையில் ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகளில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த கனிமொழி எம்.பி., "முரசு புயலில் சிக்கி சென்னை காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இத்துயரத்திற்கு பிறகும் மீன்வளத் துறை அமைச்சர் மீனவ மக்களைச் சந்திக்க வராதது ஏன்?

பேரிடர் காலத்திலும் அலட்சியமாக செயல்பட்ட தவெக அரசு இந்தத் துயரத்திற்கு உடனடியாக பொறுப்பேற்று, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Summary

Why was no action taken even after being informed that the fishermen had gone missing? DMK MP Kanimozhi’s question

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.