முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு!எஸ்பிஐ வங்கியின் 3.75 லட்சம் தரவுகள் திருட்டு! ‘டார்க் வெப்’பில் வெளியீடு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!சென்னையில் விடியவிடிய மழை! மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. பதிவு! தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை

சமூக ஊடகங்களில் பெண்களை தொடர்ந்து அவதூறாகப் பேசும் தவெகவினர்! கனிமொழி கண்டனம்

மேயர் பிரியா குறித்து அவதூறு, நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா கைது குறித்து திமுக எம்.பி. கனிமொழி கைது...

Kanimozhi

கனிமொழி - X

Updated On :

சட்டரீதியாகவும் காவல்துறையை வைத்தும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பெண்கள் மீது தொடர்ந்து தவெகவினர் வன்முறையை கட்டவிழ்த்து கொண்டிருக்கிறார்கள் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"சமூக ஊடகங்களில் தவெகவினர், பெண்களை தொடர்ந்து அவதூறாகப் பேசுகிறார்கள்.

மேயர் பிரியா, திமுக மற்றும் எதிர்க்கட்சிகளில் உள்ள பெண்களைப் பற்றி மோசமான பதிவுகள் சமூக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதல்வருக்கு எதிராக ஏதும் நடந்தால் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள்.

ஒரு பெண் அமைச்சர் பேசியது, ஒரு அமைச்சரின் போதைப்பொருள் விடியோ, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது தொடர்பாக ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அவர்களை எல்லாம் கைது செய்ய தைரியம் இருக்கிறதா?

நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா கைது என்பது பழிவாங்கும் நடவடிக்கை. நள்ளிரவில் அவருக்கு உடை மாற்றக்கூட அனுமதி கொடுக்காமல் அவரை கைது செய்திருக்கிறார்கள். இதுதான் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பதா?

சட்டரீதியாகவும் காவல்துறையை வைத்தும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பெண்கள் மீது தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்து கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

Summary

Kanimozhi condemns those who continue to defame women on social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.