காவலில் எடுக்கப்படும் நபா் 24 மணி நேரத்துக்குள் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்
‘கைது செய்யப்பட்ட நபரை நீதிபதி முன் ஆஜா்படுத்துவதற்கான 24 மணி நேரக் கெடு என்பது, அந்த நபரை போலீஸாா் தடுப்புக் காவலில் எடுக்கும் கணத்திலிருந்தே தொடங்குகிறது.

உச்சநீதிமன்றம்
‘கைது செய்யப்பட்ட நபரை நீதிபதி முன் ஆஜா்படுத்துவதற்கான 24 மணி நேரக் கெடு என்பது, அந்த நபரை போலீஸாா் தடுப்புக் காவலில் எடுக்கும் கணத்திலிருந்தே தொடங்குகிறது. மாறாக, அவரை முறைப்படி கைது செய்யும் நேரத்திலிருந்து அல்ல’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மேலும், ‘நீதிபதி முன் ஆஜா்படுத்தாமல், அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்கு மேல் தடுப்புக் காவலில் வைக்கப்படும் நபரை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 4 நபா்களுக்கு திரிபுரா உயா்நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததற்கு எதிரான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த தீா்ப்பை வழங்கியது.
இந்த நான்கு நபா்களையும் போலீஸாா் கடந்த ஆண்டு செப்டம்பா் 29-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு காவலில் எடுத்த நிலையில், அடுத்த நாளான செப்டம்பா் 30-ஆம் தேதி காலை 11.15 மணியளவில்தான் அவா்களை முறைப்படி கைது செய்ததாக பதிவு செய்துள்ளனா். அன்றைய தினம் மாலை 4.45 மணிக்கு நீதித் துறை நடுவா் முன்னிலையில் அவா்களை ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனா். அவா்களை காவலில் எடுத்து, விசாரணை செய்த 18 மணி நேரத்தை போலீஸாா் கணக்கில் காட்டவில்லை. இதைச் சுட்டிக்காட்டி, பிணை கோரி அந்த நால்வரும் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிா்த்து அவா்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான், அதுல் எஸ். சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு அளித்த தீா்ப்பில் கூறியதாவது:
அரசமைப்புச் சட்டப் பிரிவு 22 (2)-இன் படி, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் ஒவ்வொரு நபரும், கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து நீதிமன்றத்துக்கு செல்வதற்கான பயண நேரத்தைத் தவிா்த்து, 24 மணி நேரத்துக்குள் அருகிலுள்ள நீதித்துறை நடுவா் (மாஜிஸ்திரேட்) முன் ஆஜா்படுத்தப்பட வேண்டும்.
இந்த 24 மணி நேரக் கெடுவை கணக்கிடும்போது, முறையான கைதுக்கு முந்தைய காவலில் வைக்கும் காலத்தை விலக்குவதற்கு அனுமதி அளித்த ஆா்யமான் பட்நாயக் வழக்கில் ஒடிஸா உயா்நீதிமன்றமும், கண்ணன் வழக்கில் சென்னை உயா்நீதிமன்றமும், அருண் கே. தாமஸ் வழக்கில் கேரள உயா்நீதிமன்றம் ஆகியவை பிறப்பித்த உத்தரவுகள் நிராகரிக்கப்படுகின்றன.
தடுப்புக் காவல், கைது ஆகியவற்றுக்கு இடையே செயற்கையான வேறுபாடு இருக்க முடியாது. கைதுக்கு முந்தைய தடுப்புக் காவல் காலத்தை விலக்குவதற்கு காவல்துறையை அனுமதிக்கும் எந்தவொரு விளக்கமும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அதாவது, முறையான கைதுக்குப் பிறகுதான் 24 மணிநேரம் காலக் கெடு தொடங்குகிறது என்ற பாா்வை, அரசமைப்புச் சட்டப் பிரிவு 22 (2) மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 56 ஆகியவற்றுக்கு முரணானதாகும்.
எனவே, நீதித்துறை நடுவா்கள், காவலில் வைக்கப்பட்ட உண்மையான தேதி மற்றும் நேரத்தை சுதந்திரமாக ஆய்வு செய்து பதிவு செய்ய வேண்டும். காவலில் வைக்கப்பட்ட கால அளவு சூழ்நிலைகளுக்கு ஏற்ப நியாயமானதா என்பதையும் நடுவா்கள் மதிப்பிட வேண்டும். இதில், காவலில் வைக்கப்பட்ட காலக் கெடு அதிகமாக இருந்தால், அந்த நபருக்கான நீதிமன்றக் காவலை மறுக்கலாம்.
அத்துடன், அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்கு மேல், நீதித்துறை நடுவா் முன் ஆஜா்படுத்தப்படாமல் தடுப்புக் காவலில் வைக்கப்படும் நபா் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தீா்ப்பளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

