
முதல்வர் விஜய்க்கு தேர்தல் பயம்: கனிமொழி எம்.பி.
முதல்வர் விஜய்க்கு தேர்தல் பயம் இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியது குறித்து...

முதல்வர் விஜய் - திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்
முதல்வர் விஜய்க்கு தேர்தல் குறித்த பயம் இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் கனிமொழி எம்.பி. பேசியதாவது, "மக்களை ஏமாற்றியும், ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் தவெகவுக்கு பாடம் புகட்டும் அளவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.
இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அவர்கள் பணம் தருவதாக அவர்களின் கூட்டணிக் கட்சியினரே விமர்சிக்கும் அளவுக்கு நேர்மையான, தூய சக்தி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எந்தத் தவறும் செய்யப் போவதில்லை, செய்யவும் மாட்டோம் என மேடைக்கு மேடை பெருமையாகப் பேசுவது மட்டும் போதாது. உண்மையாகவே அவ்வாறு இருக்க வேண்டும்.
மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை, பாதுகாப்பும் இல்லை. ஒவ்வொரு நாளும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அச்சத்துடனேயே வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வளர்ச்சிக்கான எந்தவொரு திட்டங்களும் கிடையாது, தொழில் முதலீடுகள் கிடையாது. தூய சக்தி எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். மக்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்கு எங்கிருந்து பணம் வருகிறது?
சட்டப்பேரவைத் தேர்தலுக்கே அதிகமாக பிரசாரம் செய்யாத ஒரு முதல்வர், இடைத்தேர்தலுக்காக தெரு தெருவாகச் சென்று பிரசாரம் செய்கிறாரெனில், தேர்தல் மீது விஜய்க்கு பயம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.
Summary
CM Vijay has a fear of elections, says DMK MP Kanimozhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




