திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார்

தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது குறித்து...

Maragatham Kumaravel | Sathyabhama

தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் - சத்யபாமா

Published On :

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமையில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவும் இவ்விரு தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக். 4) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

இந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யும், திமுக வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமியும், நாதக வேட்பாளர்களை ஆதரித்து சீமானும், அதேபோல் இடதுசாரிகள் கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் தவெக அதிகளவில் செலவழித்ததாகக் கூறி, தவெக மீது தேர்தல் ஆணையத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் அமலன் புகார் அளித்துள்ளார்.

இவ்விரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்குச் சென்றபோதிலும், சாலைவலம் சென்றபோதிலும் பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தொகுதிகளிலும் முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி, சுமார் 80 கி.மீ. தொலைவுக்குச் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டது, உயரமான கொடிக் கம்பங்கள், வேறு ஊர்களில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டது, வரவேற்பு, தாரை - தப்பட்டை என பல கோடி ரூபாயை தவெகவினர் செலவழித்ததாகத் தெரிகிறது.

தேர்தல் பிரசாரத்துக்காக ரூ. 40 லட்சம் செலவழிக்கலாம் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள நிலையில், தவெகவினர் பல கோடி ரூபாய் செலவு செய்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததைவிட அதிகளவில் செலவு செய்வது தேர்தல் விதிகளுக்கு முரணானது.

தேர்தல் பிரசாரத்துக்கு தவெகவினர் செலவிட்ட தொகையைக் கணக்கிட்டு, அதனை அக்கட்சியின் வேட்பாளர்களின் குறிப்பில் சேர்த்தால், தேர்தல் ஆணையத்தின் நிர்ணயத் தொகையைவிட பல மடங்கு அதிகம் வரும்.

ஆகையால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தவெக வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, இருவரும் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என புகார் மனுவில் வழக்குரைஞர் அமலன் தெரிவித்துள்ளார்.

Summary

Complaint against TVK candidates for spending crores on by-election campaigning

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.