புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!
குடிநீர் பிரச்னை குறித்து புகார் அளிக்கச் சென்றவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தவெக ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தியுள்ளது.

திமுக - கோப்புப் படம்
குடிநீர் பிரச்னை குறித்து புகார் அளிக்கச் சென்ற சாமானியரை அடித்துக் கொலை மிரட்டல் விடுத்த தவெக சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திமுக சட்டத்துறை இணை செயலாளர் இ.பரந்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
துறையூர் தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை பற்றி புகார் அளித்தும் தவெக அரசு நடவடிக்கை எடுக்காததால், துணை சபாநாயகர் ரவி சங்கரிடம் புகார் அளிக்க சென்ற கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்கிற சாமானியரை, கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ரவி சங்கர்.
அதுபற்றி கார்த்திக் குமார் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் தாரரை மிரட்டி மூடி மறைக்க துடிக்கிறார் முதல்வர் விஜய்.
ரீல்ஸ்சிலும், சமூக ஊடகங்களிலும் மட்டுமே அரசை நடத்தி வரும் த.வெ.க அரசு இதை மூடி மறைக்க, பாதிக்கப்பட்டவரை மிரட்டி விடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் சொல்லியபடி பேசாவிட்டால் குடும்பத்தையே கொன்று விடுவோம் என கார்த்திக் குமாரை மிரட்டி உள்ளனர். இது அத்தனைக்கும் காவல்துறையும் உடந்தையாக இருந்துள்ளது வெட்கக் கேடு.
மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி என்பவர் தன்னை மிரட்டி சட்டப்பேரவை துணைத் தலைவர் வீட்டிற்கு அழைத்து சென்று விடியோ எடுத்தாக புகார்தாரர் கூறி உள்ளார். இதுதான் தவெக அரசின் காவல்துறை லட்சணம்.
இரண்டு நாட்கள் முன்பு மதுவிலக்கு போலீசாரே கஞ்சாவை மறைத்து வைத்து மதுக்கடைக்கு எதிராக போராடியவரை கைது செய்ய திட்டம் போட்டு கையும் களவுமாக சிக்கினார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பண்டிகை தினத்தன்று 11 கொலைகள் நடந்துள்ளன, அச்சமூட்டும் கொலை செய்திகள் இன்னும் வந்து கொண்டே இருக்கின்றன.
மாற்றம் மாற்றம் என சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கேடு கெட்ட சக்தி தற்போது அவர்களுக்கு வாக்களித்தவரையே அடித்து துன்புறுத்தி உள்ளது.
மக்கள் பிரச்னைகளை தீர்த்துவைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் கோரிக்கை வைத்தாலே தாக்குவது எந்த ஜனநாயகத்திலும் இதுவரை நடக்காத ஒன்று.
ரசிகர் மன்ற டிக்கெட் பிரச்னைகள்போல மக்கள் பிரச்னையை கையாண்டு தாக்குவது, அந்த நபரை மிரட்டி பொய் வாக்குமூலம் பெறுவது, இது தான் நீங்கள் தமிழ்நாட்டுக்கு தரும் மாற்றமா முதல்வரே?
தாக்குதல் நடத்திய தவெக சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவி சங்கர், மிரட்டலுக்கு துணை போன காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து, கைது செய்யுங்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Threatening an ordinary citizen with death after a physical assault! DMK demands action against TVK MLA
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


