தீபாவளி பட்டாசு வெடிப்பு விதிமீறல்: சென்னையில் ஒரே நாளில் 237 வழக்குகள் பதிவு!பெரியார் அறிவுலக ஊழல்: பபாசி நிர்வாகிகளுடன் ராஜ்மோகன் ஆலோசனை!இதுவரை 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சிதீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா தவெக? டிடிவி தினகரன் கேள்வி!பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு: எழுத்தாளர்கள் கூட்டறிக்கை!பட்டாசு சப்தத்தைவிட பட்டா கத்திகளின் சப்தமே அதிகம்! உதயநிதி ஸ்டாலின்புற்றுநோய் மருந்துகள்! குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் அமல்!தண்ணீர் கேட்டவர் மீது தாக்குதல்! பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்!தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 8 கொலைகள்!தேனியில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்தவர்களை கண்டித்த எஸ்.ஐ. படுகொலை!காற்று மாசு! சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!இஸ்ரேலில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் காடி ஐசென்கோட்!

தீபாவளி பட்டாசு வெடிப்பு விதிமீறல்: சென்னையில் ஒரே நாளில் 237 வழக்குகள் பதிவு!

தீபாவளி அன்று சென்னையில் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து...

கோப்புப்படம்

Updated On :

தீபாவளி அன்று சென்னையில் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றம் நிர்ணயித்த நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பாக சென்னை பெருநகரில் ஒரே நாளில் மொத்தம் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகரில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ. அமல்ராஜ் உத்தரவின்பேரில், காவல் உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த நவ. 8 அன்று தீபாவளி பண்டிகையின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி, உச்சநீதிமன்றம் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 148 வழக்குகளும், உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஒலி எழுப்பும் வகையில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 79 வழக்குகளும் என மொத்தம் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.