தீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா தவெக? டிடிவி தினகரன் கேள்வி!பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு: எழுத்தாளர்கள் கூட்டறிக்கை!பட்டாசு சப்தத்தைவிட பட்டா கத்திகளின் சப்தமே அதிகம்! உதயநிதி ஸ்டாலின்புற்றுநோய் மருந்துகள்! குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் அமல்!தண்ணீர் கேட்டவர் மீது தாக்குதல்! பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்!தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 8 கொலைகள்!தேனியில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்தவர்களை கண்டித்த எஸ்.ஐ. படுகொலை!காற்று மாசு! சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!இஸ்ரேலில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் காடி ஐசென்கோட்!

தீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா தவெக? டிடிவி தினகரன் கேள்வி!

தமிழ்நாட்டில் நேற்று 9 கொலைகள் நடைபெற்றதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

TTV Dhinakaran

டிடிவி தினகரன் - கோப்புப் படம்

Updated On :

தீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா தவெக அரசு என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் தீபாவளி நாளான நேற்று ஒரு நாளில் மட்டும் 2 சிறுவர்கள், ஒரு இளம்பெண், ஒரு காவல் அதிகாரி உள்பட 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் பதவிட்டிருப்பதாவது:

“தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 9 படுகொலைச் சம்பவங்கள் – தீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா இந்த தவெக அரசு?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இளைஞர் ஒருவரும், கல்லல் அருகே ரவுடியும் ஓட ஓட விரட்டிப் படுகொலை,

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் கட்டி வைத்து கொலை,

கடலூர் மாவட்டம் காட்டுப்பாளையம் அருகே மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை,

சென்னை வியாசர்பாடியில் 18 வயது இளைஞர் கொடூர கொலை,

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை,

என நேற்றைய தீபாவளி திருநாள் கொலைச் சம்பவங்களின் சங்கமமாக உருவெடுத்திருக்கிறது.

அதிலும், தேனி மாவட்டம் சமதர்மபுரத்தில் சாலையில் வாகனங்களை வழிமறித்து பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்செந்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருப்பதும், கடலூர் அருகே கொலை குற்றவாளியை பிடிக்க சென்ற காவல்துறையினர் மீது நடைபெற்றிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதலும் கடந்த 6 மாத கால தவெக ஆட்சியில் காவல்துறையினர் மீதே தொடரும் தாக்குதல்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொடங்கி கடைக்கோடி மாவட்டங்கள் வரை படுகொலைச் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெறும் அளவிற்கு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முதலமைச்சரையும், தீபாவளி சிறப்பு தின நிகழ்வுகளில் விருந்தினர்களாக பங்கேற்று கொண்டாடி மகிழும் அமைச்சர்களையும் பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது.

மக்களை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கிய அசுரர்களை, திருமால் அழித்து நன்மை அளித்த இத்திருநாளை கொண்டாடவேண்டிய மக்கள், தினம்தோறும் நடைபெறும் கொலை கொள்ளையை பார்க்கும் போது அசுரர்கள் இன்னும் வாழ்வதாகவும், அவர்களை அழிக்கவேண்டிய இந்த அரசு வெறும் வேடிக்கை மட்டுமே பார்ப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, பொதுமக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு அடிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி என்பதை இனியாவது உணர்ந்து, அதளபாதாளத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

TTV Dhinakaran condemns the 9 murders that took place in Tamil Nadu yesterday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.