பட்டாசு சப்தத்தைவிட பட்டா கத்திகளின் சப்தமே அதிகம்! உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்
பண்டிகை நாளில் பட்டாசு சப்தத்தைவிட பட்டா கத்திகளின் சப்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தீபாவளி நாளான நேற்று ஒரு நாளில் மட்டும் 9 கொலைகள் நடந்துள்ளன. இதில், 3 ரெளடிகள், 2 சிறுவர்கள், ஒரு இளம் பெண், ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் அடங்குவர்.
அதிகபட்சமாக திருச்சியில் 3 பேரும், சிவகங்கையில் 2 பேரும், கடலூர், சென்னை, திருவள்ளூர், தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதவிட்டிருப்பதாவது:
“இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சப்தத்தைவிட பட்டா கத்திகளின் சப்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வரை வன்மையாக கண்டிக்கிறேன்.
முதல்வர் ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி விடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
The sound of machetes is louder than the sound of firecrackers! – Udhayanidhi Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


