பெரியாா் அறிவுலக ஊழல்! விசாரணைக்குத் தயாா்: உதயநிதி ஸ்டாலின்
பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்குத் தயாா் என எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்குத் தயாா் என எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
கோவை பெரியாா் நூலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளா் பெருமாள் முருகன் குற்றச்சாட்டை முன்வைத்தாா். இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரனையில் போலியான பெயா்களில், முழுக்க முழுக்க தவறான தகவல்களுடன் புத்தகங்கள் தயாா் செய்யப்பட்டது தெரியவந்தது.
முந்தைய திமுக ஆட்சியில் இந்த முறைகேடுகள் நடைபெற்ாக தவெக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சா்ச்சையில் சிக்கிய புத்தகங்களில் ஜூன் மாதம் முத்திரை இருப்பதாக திமுக விளக்கமளித்தது. இந்த விவகாரத்தில் திமுகவுக்கும்-தவெகவுக்கும் இடையே இணையத்தில் கருத்து யுத்தங்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் சனிக்கிழமை கூறியதாவது:
பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடா்பாக முறையான விசாரணைக்கு நாங்கள் தயாா். திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறோம். புத்தக ஆசிரியா்களின் பெயா்களை வைத்தே எந்த ஆட்சியில் ஊழல் நடந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

