தீபாவளி: பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை!
தீபாவளி பண்டிகையையொட்டி பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து...

படம் - எக்ஸ்
தீபாவளி பண்டிகையையொட்டி, பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை சனிக்கிழமை (நவ. 7) எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் பைக் ரேஸில் ஈடுபடுவதும் பைக் சாகசங்களை நிகழ்த்துவதும் உண்டு.
இதனால், சாலைகளில் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு அவை பொதுமக்களையும் பெரிதும் பாதிக்கிறது. இதுமாதிரியான நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்காக அறிவிப்பு ஒன்றை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தனது எக்ஸ் தளப் பதிவில், “தீபாவளி கொண்டாட்டத்தில் பைக் சாகசத்திற்கு இடமில்லை! இருசக்கர வாகனப் பந்தயம் மற்றும் ஆபத்தான பைக் சாகசங்கள் மீதுகடும் சட்ட நடவடிக்கை!” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், தீபாவளிப் பண்டிக்கையையொட்டி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சோதனைச் சாவடிகளை அமைத்து காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
In view of the Diwali festival, the Tamil Nadu Police issued a warning on Saturday (Nov. 7) stating that strict action will be taken against those who engage in bike stunts.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


