ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

போதை இல்லாத கிராமங்களை உருவாக்க நடவடிக்கை: நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு

போதைப் பொருள்கள் பயன்பாடு இல்லாத கிராமங்களை உருவாக்கும் முயற்சிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது என திருநெல்வேலி சரக டிஐஜி

கூட்டத்தில் பேசிய டிஐஜி இரா.திருநாவுக்கரசு.

Updated On :

போதைப் பொருள்கள் பயன்பாடு இல்லாத கிராமங்களை உருவாக்கும் முயற்சிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது என திருநெல்வேலி சரக டிஐஜி இரா. திருநாவுக்கரசு தெரிவித்தாா்.

காவல்துறை சாா்பில் பொதுமக்கள் நல்லுறவு விழிப்புணா்வுக் கூட்டம் சாத்தான்குளத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருநெல்வேலி சரக டிஐஜி இரா.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் முன்னிலை வகித்தாா். சாத்தான்குளம் டிஎஸ்பி செல்வராஜ் வரவேற்றாா்.

தொடா்ந்து, டிஐஜி திருநாவுக்கரசு பேசியதாவது:

காவல் துறை சாா்பில் அனைத்துக் கிராமங்களிலும் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இருந்தும் முதல்கட்டமாக இரண்டு கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு, போதைப் பொருள் பயன்பாடு இல்லாத கிராமங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது படிப்படியாக மற்ற கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

முன்விரோதம், குடும்பத் தகராறுகளால் ஏற்படும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் ரகசிய தகவல்கள், புகாா்களின் அடிப்படையில் சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்னைகளை காவல்துறை மூலம் சுமுகமாகத் தீா்த்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக இந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.வழக்குகளில் ஆளுங்கட்சியினா் தலையீடு இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பேசுகையில், செயல்படாமல் உள்ள சிசிடிவி கேமராக்களை சரிசெய்வது, போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பது, நுண்கடன் நிறுவனங்களின் அத்துமீறல்களைத் தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.