டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்வு; 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவுலக ஊழல்! நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? எந்த கணக்கில் பணம் தரப்பட்டது?பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

அறிவை வளர்க்கும் நூலகங்களில் போலி நூல்களா? டிடிவி தினகரன் கண்டனம்!

கோவை பெரியார் அறிவுலக விவகாரத்தில் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி....

டிடிவி தினகரன்

Updated On :

அறிவை வளர்க்க வேண்டிய நூலகங்களை, போலி நூல்கள் ஆக்கிரமித்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பெரியார் அறிவுலகத்திற்கு போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார் - அறிவை வளர்க்க வேண்டிய நூலகங்களை, போலி நூல்கள் ஆக்கிரமித்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு, இல்லாத பதிப்பகங்களின் பெயரில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

அறிவையும், பகுத்தறிவையும் வளர்க்க வேண்டிய நூலகத்தில் நடைபெற்றிருக்கும் முறைகேடை சாதாரணமாக கடந்து செல்லாமல், இல்லாத பதிப்பகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது எப்படி ? அதற்கான ஆணையை பிறப்பித்தது யார்? நூல்களை பரிசோதித்து அங்கீகாரம் வழங்கியது யார் ? என நூல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் தொடங்கி பணப்பரிவர்த்தனை வரை தொடர்புடையவர்கள் ஒவ்வொருவரையும் விசாரிக்க வேண்டும்.

எனவே, பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகாரை தனி விசாரணைக் குழு அமைத்து உண்மைகளை வெளிக்கொண்டுவருவதோடு, இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு போலி நூல்கள் இருக்கும் பட்சத்தில் அதனை அகற்றிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கோவையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, கடந்த மாதம் முதல்வர் ச. ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Summary

AMMK General Secretary TTV Dhinakaran has stated that the infiltration of fake books into libraries meant to foster knowledge can never be tolerated.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.