பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை டிடிவி தினகரன் சந்தித்தது பற்றி...

guv

தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு - கோப்புப்படம்

Updated On :

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் இன்று காலை நேரில் சந்தித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை நேரில் சென்ற டிடிவி தினகரன், தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.வி. ஆர்லேகருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசியதாவது:

"தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. போதைப் பொருள்களை இவர்களே விற்பனை செய்கிறார்கள். தமிழ்நாடு காவல்துறையினர் ஆட்சியாளர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்படுகிறார்கள். அவர்கள் நீதிமன்ற விசாரணையில் மாட்டிக் கொள்ளப் போகிறார்கள்.

மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அரிசி விலை அதிகமாக உள்ளது. விலைவாசி விண்ணை முட்டுகிறது. உண்மையை வெளியே சொல்பவர்களை படத்தில் வருவது போன்று மிரட்டிப் பார்க்க முடியாது.

தமிழ்நாட்டுக்கு வரும் முதலீடுகள் வெளி மாநிலங்களுக்குச் செல்கின்றன. தமிழ்நாட்டையே தனியார்மயமாக்க முதல்வர் திட்டமிடுகிறார். ஜன நாயகன் தயாரிப்பாளர் போன்ற ஒருவரிடம் தமிழ்நாட்டை கொடுத்துவிட்டு ஓய்வெடுக்கலாம் என்று முதல்வர் நடக்கிறார்.

தமிழ்நாட்டில் காவல்துறை ஏவல்துறையாக செயல்படுகின்றது. ஆட்சிக்கு எதிராக பேசுபவர்களை மிரட்டிப் பார்க்கிறார்கள். பேராசிரியர் கலையரசனை கைது செய்தது சட்டத்துக்குப் புறம்பானது.

மாநிலம் முழுவதும் பல இடங்களை சிறுமிகள் காணாமல் போனது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை சரி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.

எந்த அனுபவமும் இல்லாமல் சினிமாவிலிருந்து நேரடியாக அரசியலுக்கு வந்துள்ளார். வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி செல்கிறது.

பட்டு வேட்டி சட்டை போட்டுக் கொண்டு ஜோதிடர் சொல்வதைக் கேட்டு ஆட்சி செய்து வருகிறார்கள். வாக்களித்த மக்கள் புரிந்துகொள்ள தொடங்கியுள்ளனர். 23ஆம் புலிகேசி படத்தில் பார்த்தது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

குதிரை பேரம் புகார் குறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள், சொத்து சேர்க்கிறார்கள் என்ற தகவல் எங்களுக்கு வருகிறது. அதையெல்லாம் தொகுத்து ஆளுநரிடம் புகார் அளிப்போம்” எனத் தெரிவித்தார்.

Summary

TTV Dhinakaran meets the Governor of Tamil Nadu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.