வாழ்வாதாரம் இழப்பு: விவசாயிகளுக்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்? - டிடிவி தினகரன் கேள்வி!
சம்பா மற்றும் தாளடி சாகுபடியை இழந்து தவிக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

முதல்வர் விஜய் - டிடிவி தினகரன் - கோப்புப் படம்
சம்பா மற்றும் தாளடி சாகுபடியை இழந்து தவிக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்ற கேள்வியை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக். 14) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
நிர்வாகத் திறனற்ற தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் - காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தால் குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில், தற்போது நிலவும் கடுமையான வறட்சியால் சம்பா மற்றும் தாளடி சாகுபடியோடு தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கும் விவசாயப் பெருமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
காவிரியிலிருந்து பெற வேண்டிய நீரை பெற்றுத்தர முடியாத தவெக அரசை நம்பி இனியும் பயனில்லை என்பதை உணர்ந்து தங்களது சொந்த செலவில் பம்பு செட்டுகளை அமைத்து நிலத்தடி நீரின் மூலம் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்காமல் வஞ்சித்த அரசால் விதைத்தவர்களின் கண்முன்னே பயிர்கள் கருகும் அளவிற்கான சூழல் உருவாகியுள்ளது.
விவசாயிகளின் தோழன் என்றும், அடுத்த ஜென்மத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுவதாகவும் பிரச்சாரத்தின் போது வாய் முட்டப் புளுகிய தவெக தலைவர் ஜோசப் விஜய், தவெக அரசின் கையாலாகாத் தனத்தால் சம்பா மற்றும் தாளடி சாகுபடியை இழந்து தவிக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
தவெக கொடுத்த வாக்குறுதிகளில் பிரதான வாக்குறுதியான பயிர்க்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை கூட முழுமையாக நிறைவேற்றாமல் மாநிலம் முழுவதும் விவசாயிகளை போராட வைக்கும் தவெக அரசும், அதன் முதல்வரும்தான் விவசாயிகளின் தோழனா? அடுத்த ஜென்மத்திலும் துரோகம் இழைப்பதற்காகத்தான் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறாரா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, அரசின் நிர்வாகத் திறமையின்மையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் உடனடியாக தள்ளுபடி செய்திடுவதோடு, காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
நிரà¯à®µà®¾à®à®¤à¯ திறனறà¯à®± தவà¯à® à®à®°à®à®¿à®©à¯ à®®à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®¯à®±à¯à®± à®à¯à®¯à®²à¯à®ªà®¾à®à¯à®à®³à®¾à®²à¯ வாழà¯à®µà®¾à®¤à®¾à®°à®¤à¯à®¤à¯ à®à®´à®¨à¯à®¤à¯ தவிà®à¯à®à¯à®®à¯ விவà®à®¾à®¯à®¿à®à®³à¯ - à®à®¾à®µà®¿à®°à®¿ à®à¯à®²à¯à®à®¾à®µà¯ வறà®à¯à®à®¿ பாதிதà¯à®¤ மாவà®à¯à®à®à¯à®à®³à®¾à® à®à®±à®¿à®µà®¿à®¤à¯à®¤à¯ விவà®à®¾à®¯à®¿à®à®³à¯à®à¯à®à¯ à®à®°à®¿à®¯ à®à®´à®ªà¯à®ªà¯à®à¯à®à¯ à®à®à®©à®à®¿à®¯à®¾à® வழà®à¯à®à®¿à® வà¯à®£à¯à®à¯à®®à¯.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 14, 2026
à®®à¯à®à¯à®à¯à®°à¯ à®à®£à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à¯à®©à¯ 12 à®à®®à¯ தà¯à®¤à®¿ திறà®à¯à®à®ªà¯à®ªà® வà¯à®£à¯à®à®¿à®¯â¦
Summary
AMMK General Secretary TTV Dhinakaran raised a question today (Oct. 14): "What answer is the Chief Minister going to give to the lakhs of farmers who are in distress after losing their Samba and Thaladi crops?"
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


