ரூ. 3,108 கோடியில் சென்னை சுற்றுக் குழாய் திட்டம்: முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்!
சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் விஜய்.

சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(அக். 14) அடிக்கல் நாட்டினார்.
இதன்மூலம் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உள்பட 9 குடிநீர் ஆதாரங்கள் 98 கி.மீ. தொலைவுக்கு இரும்புக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட உள்ளன.
தற்போது, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் சென்னையில் உள்ள 85.7 லட்சம் குடும்பங்களுக்கு தினமும் 1,200 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு நிலையத்தில் இருந்தும் குடிநீர் விநியோகம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்டபிரதான குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
இக்கட்டான காலங்களில் ஒரு பகுதியின் ஆதாரங்களிலிருந்து, பற்றாக்குறை உள்ள மற்றொரு ஆதாரத்துக்கு உபரிநீரை மாற்ற முடியாது. எனவே, தற்போதுள்ள குடிநீர் கட்டமைப்பில் உள்ள குறைகளைக் களையும் வகையில், பெருநகர சென்னையில் பிரதான சுற்றுக் குழாய் திட்டத்தைச் செயல்படுத்த முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, இதற்காக ரூ.3,108.55 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது.
இந்த நிலையில், சென்னைக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் ரூ. 3,108.55 கோடியில் சுற்றுக் குழாய் திட்டத்துக்கு, முதல்வர் ஜோசப் விஜய் சோழிங்கநல்லூரில் அடிக்கல் நாட்டினார்.
Summary
Chief Minister C. Joseph Vijay laid the foundation stone for the Chennai Ring Main project today (Oct. 14).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


