பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ரூ. 3,108 கோடியில் சென்னை சுற்றுக் குழாய் திட்டம்: முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்

சென்னைக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் சுற்றுக் குழாய் திட்டத்துக்கு, முதல்வா் விஜய் இன்று சோழிங்கநல்லூரில் அடிக்கல் நாட்டுகிறாா்.

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :

சென்னைக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் ரூ.3,108.55 கோடியில் சுற்றுக் குழாய் திட்டத்துக்கு, முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை (அக். 14) சோழிங்கநல்லூரில் அடிக்கல் நாட்டுகிறாா்.

இதன்மூலம் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உள்பட 9 குடிநீா் ஆதாரங்கள் 98 கி.மீ. தொலைவுக்கு இரும்புக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட உள்ளன.

தற்போது, சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் சென்னையில் உள்ள 85.7 லட்சம் குடும்பங்களுக்கு தினமும் 1,200 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நிலையத்தில் இருந்தும் குடிநீா் விநியோகம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட​பிரதான குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

இக்கட்டான காலங்களில் ஒரு பகுதியின் ஆதாரங்களிலிருந்து, பற்றாக்குறை உள்ள மற்றொரு ஆதாரத்துக்கு உபரிநீரை மாற்ற முடியாது. எனவே, தற்போதுள்ள குடிநீா் கட்டமைப்பில் உள்ள குறைகளைக் களையும் வகையில், பெருநகர சென்னையில் பிரதான சுற்றுக் குழாய் திட்டத்தைச் செயல்படுத்த முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, இதற்காக ரூ.3,108.55 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.