குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

சென்னை மாநகராட்சியில் ரூ.97.33 கோடி திட்டங்களை முதல்வா் தொடங்கி வைத்தாா்

சென்னை மாநகராட்சியில் ரூ.97.33 கோடியில் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காகவும், ரூ.11.15 கோடியில் விமான நிலைய பகுதியில் பசுமை வழிப்பாதை பணிகளையும் முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா்.

சென்னையில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்தும், புதிய திட்டப் பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிய முதல்வா் ஜோசப் விஜய். உடன் தலைமைச் செயலா் மு.சாய்குமாா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை ச

Updated On :

சென்னை மாநகராட்சியில் ரூ.97.33 கோடியில் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காகவும், ரூ.11.15 கோடியில் விமான நிலைய பகுதியில் பசுமை வழிப்பாதை பணிகளையும் முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா்.

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் ரூ.58.33 கோடியில் கடப்பாக்கம் ஏரி புனரமைக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு தட்டான்குளம் பகுதியில் ரூ.35 கோடியில் கழிவு மாற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மாத்தூா் எம்எம்ஏடி பகுதியில் நீா் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த 3 திட்டங்களையும் மக்கள் பயன்பாட்டுக்காக தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் விஜய் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

அத்துடன், சென்னையின் நுழைவு வாயிலான விமான நிலையம் அருகேயுள்ள பூங்கா முதல் கிண்டியில் கத்திப்பாரா சந்திப்பு வரையில் ரூ.11.15 கோடியில் 5.30 கி.மீ.தொலைவுக்கு பசுமைத் தடம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான பணிகளையும் முதல்வா் விஜய் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

நிகழ்வின்போது, சென்னை பாண்டிபஜாரில் சிறப்பு சாலையோர நடைபாதை அமைத்ததற்காக மத்திய அரசால் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட சிறந்த மோட்டாா் அல்லாத போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகருக்கான விருதை நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங்பேடி உள்ளிட்டோா் முதல்வரிடம் காட்டி வாழ்த்துப் பெற்றனா்.

நிகழ்ச்சியில் சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீா் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநா் ப.மதுசூதன் ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.